Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆவடி: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவரது செல்போனில் உள்ள ஒரு செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, அந்த செயலியில் உள்ள செயலி முகவரியில் நுழைந்த கார்த்தியை, சிறிய அளவில் முதலீடு செய்தால், அதிக பணம் கிடைக்கும் என்று ஒரு கும்பல் நம்ப வைத்துள்ளது. இதையடுத்து, அவர்கள் அளித்த வங்கிகணக்கில் ஜிபே மூலமாக பல தவணைகளாக ரூ.10 லட்சம் வரைமுதலீடு செய்துள்ளார். பிறகு, சொன்னபடி அதிக பணம் வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்தி, இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை, தி.நகரைச் சேர்ந்த செல்வம் (42) என்பவர் பெயரிலான எஸ் பேங்க் வங்கி கணக்கில் கார்த்தி செலுத்திய பணம் சேர்ந்துள்ளது தெரியவந்தது. செல்வத்திடம் நடத்திய விசாரணையில், மற்றொரு நிலத் தரகரான சென்னை – வளசரவாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன்(44), செல்வத்துக்கு வங்கி கணக்கு தொடங்கிகொடுத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், விவேகானந்தன், கடலூர், லால்பேட்டையைச் சேர்ந்த ஹலிகுல் ஜமால் (42), ஆஷ்கர் ஷெரீப் (38) ஆகியோர், வேலையில்லாதவர்களிடம் மொபைல் செயலி மூலம் பணம் வசூலித்து, வெளிநாடுகளில் இருந்து செயல்படும் இணைய தள மோசடி கும்பலின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து, கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

.

Tags: ஆவடஇளஞரடமகதசயதசயலசலபனபகதநரபரமசடமலமர.10லடசமவல
Previous Post

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்கள் வீசி தாக்குதல்: பின்னணியில் சமூக விரோதிகள் : முத்தரசன் காட்டம்.

Next Post

வன்னியர் இட ஒதுக்கீட்டால் EPS-க்கு வலுக்கும் எதிர்ப்பு..? – தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வன்னியர் இட ஒதுக்கீட்டால் EPS-க்கு வலுக்கும் எதிர்ப்பு..? – தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

வன்னியர் இட ஒதுக்கீட்டால் EPS-க்கு வலுக்கும் எதிர்ப்பு..? - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In