Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்? 34 ஆண்டுகளுக்கு பிறகு.. பாரம்பரிய வழித்தடத்தில் மொகரம் ஊர்வலம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்? 34 ஆண்டுகளுக்கு பிறகு.. பாரம்பரிய வழித்தடத்தில் மொகரம் ஊர்வலம்
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஸ்ரீநகர்: உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று மொகரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஷ்மீரில் 34 ஆண்டுகளுக்கு பின்னர் மொகரம் ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொகரமாகும்.

இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சர்ச்சரவு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேவேளையில் தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து போரிடலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மொகரம் ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறது.

இங்கு கடைசியாக கடந்த 1987ம் ஆண்டு ஆகஸ்டில் மொகரம் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று இதே பாரம்பரிய வழியில் ஊர்வலம் நடத்த துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அனுமதியளித்திருந்தார். இதனையடுத்து ஸ்ரீநகர் சிவில் லைன்ஸ் வழியாக தொடங்கிய இஸ்லாமியர்களின் அமைதி ஊர்வலம் ஜஹாங்கீர் சவுக், புத்ஷா சவுக், மத்திய தந்தி அலுவலகம், மௌலானா ஆசாத் சாலை வழியாக சென்று டல்கேட்டில் நிறைவடைந்துள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை மட்டுமே ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நேரம் பகல் 11 மணி வரை நீடிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் கருப்பு நிற உடை அணிந்து கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இதுவே 1988ம் ஆண்டுக்கு முன் இந்த பேரணி குருபஜாரில் மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு டால்கேட்டில் நிறைவடையும். இந்த முறை நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட 34 ஆண்டுகளில் ஏராளமான நெருக்கடிகளை காஷ்மீர் சந்தித்திருக்கிறது. 1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா உல் ஹக் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். எனவே அந்த ஆண்டு மொகரம் பண்டிகை ஊர்வலத்திற்கு மொகரம் மாதத்தின் 8ம் தேதி அனுமதி அளிக்கப்படவில்லை.

அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக அன்றையிலிருந்து 2022ம் ஆண்டு வரை இந்த நாளில் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இதே மாதத்தில் 10ம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பாரம்பரியமான பாதையில் இந்த ஊர்வலம் செல்லாமல் அபிகுசார்-ஜாதிபாலில் இருந்து லால்பஜார்-ஜாதிபால் வரை சென்றது. அதிலும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்தான் பங்கேற்றிருந்தனர். மட்டுமல்லாது பாதகாப்பு கெடுபிடிகளும் அதிகமாக இருந்தன. இருப்பினும் 8ம் தேதி ஊர்வலம் அனுமதிக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு, இந்தியாவில் சிறுபான்மையினரின் வழிப்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுகிறது என பிரிவினைவாதிகள் கூறி வந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இதற்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஊர்வலத்தில் ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் பங்கேற்றிருந்தது இதன் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட வளர்ச்சியே தேவையில்லை! என்எல்சிக்கு ‘மய்யம்’ கடும் எதிர்ப்பு.. கொந்தளித்த கமல்ஹாசன்

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தமிழகத்தில் புலிகள் எண்ணிகை அதிகரித்துள்ளது.. “பாதுகாக்க உறுதியேற்போம்” முதல்வர் ட்வீட்

Next Post

“திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன” – எடப்பாடி யார் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன” - எடப்பாடி யார் குற்றச்சாட்டு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    34 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் அமைதி திரும்பி உள்ளது இதை கவர்னர் கலந்து கொண்ட ஊர்வலம் உறுதிப்படுத்துகிறது இதற்கு காரணமாக இருந்த நமது பிரதமர் மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In