Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

என்ன கொடுமையடா சாமி..மாணவரின் பாட்டி மீது தாக்குதல் – கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பட்டியலின மாணவர், பாட்டி மீது தாக்குதல் - கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

 

கரூர்: கரூர் அருகே பட்டியலின மாணவர், அவரது பாட்டியை தாக்கிய கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் ஜெகதாபியை அடுத்த அல்லாளி கவுண்டனூரைச் சேர்ந்தவர் ஜீவா (14). பட்டியலின மாணவரான இவர், தனது பெற்றோரை இழந்து பாட்டி காளியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஜீவா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, ஜீவாவுக்கும், புலியூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜீவா, தனது தாய் மாமா சேகரிடம் கூறியதையடுத்து, அவர் அந்த மாணவர்களை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் மற்றும் அவரது நண்பர்கள், அல்லாளி கவுண்டனூருக்கு கும்பலாக சென்று ஜீவாவையும், அவரது பாட்டி காளியம்மாளையும் தாக்கியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. காயமடைந்த ஜீவா மற்றும் அவரது பாட்டி காளியம்மாள் இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஒரு கல்லூரி மாணவர், உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் அவருடைய நண்பர் ஒருவர் என 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

.

Tags: உடபடகதகரரகலலரதககதலபடடபடடயலனபரபளளமணவரமணவரகளமத
Previous Post

தாலி கட்டும் நேரத்தில்… வேறொருவரை காதலிக்கிறேன்! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Next Post

ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் பேசி ஸ்டாலின் வாழ்த்து… 5 மாவட்டங்களுக்கு இன்று லீவ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Video: ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் பேசி ஸ்டாலின் வாழ்த்து... 5 மாவட்டங்களுக்கு இன்று லீவ்!

ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் பேசி ஸ்டாலின் வாழ்த்து... 5 மாவட்டங்களுக்கு இன்று லீவ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In