Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை | வட்டியில்லா கடனாக ரூ.5 கோடி தருவதாக ரூ.1.40 கோடி பெற்று மோசடி செய்த 3 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | வட்டியில்லா கடனாக ரூ.5 கோடி தருவதாக ரூ.1.40 கோடி பெற்று மோசடி செய்த 3 பேர் கைது
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: வட்டியில்லாக் கடனாக ரூ.5 கோடிபெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் நிறுவன அதிபரிடம் ரூ.1.40 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ராமாபுரத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் வீரமணி. இவர்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “2021-ல்சென்னை அனகாபுத்தூர் லட்சுமிதெருவைச் சேர்ந்த ரங்கராஜன்(38), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்(44), கீழ்க்கட்டளை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார்(48) ஆகிய 3 பேரின் அறிமுகம் கிடைத்தது.

9 ஆயிரம் கோடி… அவர்கள், கோவாவில் இருந்து ஆர்பிஐ மூலம் ரூ.9 ஆயிரம் கோடி பணம் வரப்போவதாகவும், எனது நிறுவனத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வட்டியில்லாத கடனாக 5 வருடத்துக்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதற்கு கமிஷனாக ரூ.1 கோடியே 40 லட்சம் பெற்றுக் கொண்டனர்.

ஆனால், உறுதி அளித்தபடி அவர்கள் பணம் பெற்றுத் தரவில்லை. மேலும், கமிஷனாக பெற்ற பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட 3 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனப் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், வீரமணி புகாரில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

Tags: கடகடனககதசயதசனனதரவதகபரபறறமசடர.1.40ர.5வடடயலல
Previous Post

சனாதன சர்ச்சை | உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் – தமிழக ஆளுநருக்கு பாஜக கடிதம்

Next Post

அமைச்சர் மஸ்தானின் மகன், மருமகனின் கட்சி பதவி பறிப்பு – பல்வேறு புகார்களின் எதிரொலியாக திமுக தலைமை நடவடிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர் மஸ்தானின் மகன், மருமகனின் கட்சி பதவி பறிப்பு - பல்வேறு புகார்களின் எதிரொலியாக திமுக தலைமை நடவடிக்கை

அமைச்சர் மஸ்தானின் மகன், மருமகனின் கட்சி பதவி பறிப்பு - பல்வேறு புகார்களின் எதிரொலியாக திமுக தலைமை நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In