Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீங்கதான் பைக்ல ஸ்பீடா போறதா? ஆ.. அந்த வாசன் நான் இல்லைங்க.. மோடி – வாசன் சந்திப்பு.. பரபர போட்டோ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
நீங்கதான் பைக்ல ஸ்பீடா போறதா? ஆ.. அந்த வாசன் நான் இல்லைங்க.. மோடி – வாசன் சந்திப்பு.. பரபர போட்டோ
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: பிரதமர் மோடி – ஜி கே வாசன் இடையிலான சந்திப்பு தொடர்பான மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன்.. இவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வந்தன. கடந்த வருடம் கூட இவர் டெல்லி சென்று இருந்தார். முக்கியமான பல விஷயங்களை பேசுவதற்காக இவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. டெல்லியில் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தவர் நீண்ட நேரம் அவரிடம் ஆலசோனை செய்ததாக கூறப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன், தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது. பாஜகவுடன் ராசியாக இருக்கும் இவர் அமைச்சர் பதவியை கேட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு பர்சனலாக இவரை மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடியின் குட் புக்கில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் மோடியும் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கலாமே என்ற திட்டத்தில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அது நடக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக இவர்கள் கைகோர்த்து உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதற்காக நேற்று முதல்நாள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு எதிராக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் ஜி கே வாசனும் கலந்து கொண்டார். நிகழ்விற்கு பின் இரவு விருந்து எல்லோருக்கும் அளிக்கப்பட்டது. அதில் மோடி – வாசன் இருவரும் சந்தித்துக்கொண்டனர். சில நிமிடங்கள் இவர்கள் அன்பாக பேசினார்கள். ஜி கே வாசன் உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி – ஜி கே வாசன் இடையிலான சந்திப்பு தொடர்பான மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மோடி ஜி கே வாசனை பார்த்து.. பைக்ல ரொம்ப வேகமா போறீங்களாமே..

என்று கேட்பது போலவும் அய்யயோ அந்த வாசன் நான் இல்லஜி என்று ஜி கே வாசம் சொல்வது போலவும் மீம் போட்டுள்ளனர்., இந்த கற்பனை உரையாடல் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. டிடிஎப் வாசனை மையமாக வைத்து இந்த மீம் போடப்பட்டு உள்ளது. TTF வாசன் என்பவர் Twin Throttlers என்று யூ டியூப் பக்கத்தை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 2 வருடமாக இந்த டிராவல் விலாக் பக்கத்தை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் யூ டியூபில் இருக்கிறார்கள். பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவதுதான் இவரின் வழக்கம். சமீபத்தில் லடாக் சென்றதை இவர் வீடியோவாக போட்டு இருந்தார். பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது ஆகியவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார்.

அதே சமயம் இவர் வேகமாக செல்வது, சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார் உள்ளது. 2கே கிட்ஸ் தொடங்கி பைக் மீது ஆர்வமாக இருக்கும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் சென்னைக்கு இவர் சில பொருட்கள் வாங்க வந்த போது அதை பற்றி முன்கூட்டியே வீடியோ போட்டு இருந்தார்.

இதையடுத்து அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். சாலை விதிகளை மதிக்காமல் இவர் வேகமாக ஓட்டுவதாக இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன. இப்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

“மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக இளைஞரணி பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கிறேன்” – ஸ்டாலின்

Next Post

சமூக ஊடகங்கள் இல்லையென்றால் நம் மனச்சாட்சியை உலுக்கும் இந்த மாபாதகம் நடந்ததே உலகுக்கு தெரிந்திருக்காது..! – பீட்டர் அல்போன்ஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சமூக ஊடகங்கள் இல்லையென்றால் நம் மனச்சாட்சியை உலுக்கும் இந்த மாபாதகம் நடந்ததே உலகுக்கு தெரிந்திருக்காது..! – பீட்டர் அல்போன்ஸ்

சமூக ஊடகங்கள் இல்லையென்றால் நம் மனச்சாட்சியை உலுக்கும் இந்த மாபாதகம் நடந்ததே உலகுக்கு தெரிந்திருக்காது..! - பீட்டர் அல்போன்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In