மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ குறித்து Twitter இல் தற்போதைய தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிடுகையில் ..
மணிப்பூரில் குக்கி இனத்தின் இரண்டு இளம்பெண்களை மனிதமிருகங்கள் நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து வருவதையும் அப்பெண்கள் கூட்டுப்பலாத்காரத்திற்குட்படுத்தப்படுவதையும் அப்பெண்ணின் சகோதரன் சகோதரியை பாதுகாக்க முற்பட்டபோது சுட்டு வீழ்த்தப்பட்டதையும் பார்த்தபின்னர் இந்த நாட்டில் பிறந்ததற்கு வெட்கப்படுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை. ராமராஜ்யம் உருவாக்கப்போகிறோம் என்று புறப்பட்டு துரியோதனர்களிடம் தேசத்தை கொடுத்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சமூக ஊடகங்கள் இல்லையென்றால் நம் மனச்சாட்சியை உலுக்கும் இந்த மாபாதகம் நடந்ததே உலகுக்கு தெரிந்திருக்காது. மே மாதம் 4 ல் நடந்த சம்பவத்திற்கு உடனடியாக புகார் தரப்பட்டு FIR பதிவு செய்யப்பட்ட பின்னரும் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. இதுவரை வாய்திறக்காத பிரதமர் இப்போதுதான பேசுகிறார். சர்வதேச நாடுகள் நம்மை காரித்துப்பும்! உலகம் முழுவதும் நம்மை பரிகசிக்கும்! பாஜக இரட்டை இஞ்சின் அரசு என்ன செய்ய முடிந்தது? உபியிலும் ம பியிலும் வீடுகளை இடித்து நிர்மூலமாக்கும் புல்டோசர்கள் மணிப்பூரில் வேலை செய்யாதா? உலகின் மிகப்பெரிய ராணுவம் என்ன செய்கிறது? 56 இஞ்ச் மார்பு தலைவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? தேசத்திற்கே அவமானம்!


