Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

அண்ணாமலை மீது போலீஸில் புகாரளித்த பாஜக முன்னாள் நிர்வாகி! – என்ன காரணம்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in ஹாட்ஸ்டார், அரசியல் செய்திகள்
0
அண்ணாமலை மீது போலீஸில் புகாரளித்த பாஜக முன்னாள் நிர்வாகி! - என்ன காரணம்? | former bjp cadre lodged complaint against bjp state president annamalai in kovai
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பா.ஜ.க-வின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்த அண்ணாதுரை என்பவர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு புகார் ஒன்றை கோவை மாநகர ஆணையரிடம் அளித்திருக்கிறார். பா.ஜ.க வட்டாரத்தில், இந்தச் சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாதுரையை பா.ஜ.க நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அண்ணாதுரை, “நான், `பழைய சோறு டாட் காம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் நடத்திவருகிறேன். அந்த வகையில் கோவை கிளையை சாய்பாபா காலனியில், டி.எம்.பழனிசாமி என்பவரின் கட்டடத்தில் வாடகைதாரர் ஒப்பந்த அடிப்படையில் அமைத்தேன். எனது உணவகத்தை அழகுபடுத்த நான்கு லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன்.

மேற்படி ஏழு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேன். நான் வாடகை பாக்கி ஏதும் வைக்கவில்லை. கட்டடத்தின் உரிமையாளர் பழனிசாமி, ‘நான் அமெரிக்காவுக்குச் செல்கிறேன். அதனால், வாடகைப் பணத்தை என் மகள் பிருந்தாவிடம் கொடுங்கள்’ என்றார். அதையடுத்து, வாடகைத் தொகையை அவர் கூறியவாறு செலுத்திவந்தேன். இந்த நிலையில், கட்டட உரிமையாளர் பழனிசாமியின் மகள் பிருந்தா, தினமும் என் நிறுவனத்துக்கு வந்து உட்கார்ந்துகொள்வதும், என் பணியாளர்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கேட்பதையும் வாடிக்கையாகவே வைத்திருந்தார்.

இதையடுத்து, `எனது நிறுவனத்தில் எந்தத் தலையிடும் செய்யாதீர்கள்’ என்று கூறினேன்.இதனால் ஆத்திரமடைந்த பிருந்தா, என்னைத் தொழில் செய்யவிடாமல் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார். இதனால் என் தொழில் பாதிக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் வரை எனக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கட்டட உரிமையாளர் பழனிசாமியும் அவரின் அடியாட்களும் என்னைக் கட்டடத்திலிருந்து வெளியேற்ற முயன்றார்கள்.

கட்டட உரிமையாளர் பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்திருக்கிறார். அதையடுத்து கடந்த செவ்வாய்கிழமையன்று (23/5/2023), பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில், கோவை மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி, மாவட்டப் பொதுச்செயலாளர் செந்தில் ஆகியோரின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர், எனது கடையிலிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

என் பீரோவில் இருந்த முக்கியமான கோப்புகளுடன், 82,000 ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். தற்போது அந்தக் கட்டடத்தில் பா.ஜ.க-வின் கொடியும், பெயர்ப் பலகையும் நடப்பட்டிருக்கின்றன. அருகில் வசிப்போரிடம், தாங்கள் கடையை காலி செய்யச் சொன்னதாகக் கூறியிருக்கின்றனர். இந்தத் தகவலை அறிந்ததும் சென்னையிலிருந்து கோவைக்கு விரைந்தேன்.

நிறுவனத்துக்கு நேரில் சென்றபோது, குண்டர்கள் என்னை, `கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டினர். இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர ஆணையரிடம் புகாரளித்திருக்கிறேன். இது தொடர்பான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது” என்றார்.

பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை, கோவை மாநகர ஆணையரிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் தரப்பிலும் மாநகர ஆணையரிடம் முறையிடப்பட்டது. புகார் அளித்த பிறகு பேசிய கட்டட உரிமையாளரின் மகள் பிருந்தா, “அண்ணாதுரைக்குக் கட்டடத்தை வாடகைக்குக் கொடுத்தோம். அவர் ஏழு மாத காலமாகவே, வாடகைத் தொகையைச் செலுத்தவில்லை. இது குறித்து சி.எம் செல்லுக்குப் புகாரளித்திருந்தேன்.

.

Tags: aagainstannamalaibjpbjp state presidentcadrecomplaintfiledforformerinkovailodgedpolicepresidentreasonstatethewaswhatwhoபஜக
Previous Post

திட்டக்குடி அருகே வேலைக்குச் செல்லாமல் சாமியார் வேடத்தில் திரிந்த மகனை கொலை செய்த தந்தை கைது

Next Post

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு சாவர்க்கரின் பிறந்த தேதியை தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. அது எதிர்பார்த்ததுதான் – துஷார் காந்தி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு சாவர்க்கரின் பிறந்த தேதியை தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. அது எதிர்பார்த்ததுதான் – துஷார் காந்தி

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு சாவர்க்கரின் பிறந்த தேதியை தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. அது எதிர்பார்த்ததுதான் - துஷார் காந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In