Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமித்ஷா வந்தாரு உடனே கரண்ட் கட், ஞாபகமிருக்கா? இப்ப பாருங்க அதிரடியை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமித்ஷா வந்தாரு உடனே கரண்ட் கட், ஞாபகமிருக்கா? இப்ப பாருங்க அதிரடியை..!
63
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால், தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. என்ன அது? கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, சில சலசலப்புகள் எழுந்தன.. அன்றைய தினம் இரவு சென்னை ஏர்போர்ட்டுக்கு அமித்ஷா வந்தபோது, ஏர்போர்ட் வாசலிலேயே, அதாவது ஜிஎஸ்டி சாலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது… ஏர்போர்ட்: ஏர்போர்ட்டில் இருந்து அப்பதான் அமித்ஷா கிளம்பினார்.. உடனே கரண்ட் போய்விட்டது. ஏர்போர்ட் பகுதி முழுக்க இருளில் சிக்கிக்கொள்ளவும், அமித்ஷாவை பார்ப்பதற்காக, திரண்டிருந்த தொண்டர்கள் ஏமாற்றமாயினர்.. அமித்ஷா முகத்தை அவர்களால் பார்க்கவே முடியவில்லை..

பாஜக தொண்டர்கள் தவிப்பதை புரிந்துகொண்ட அமித்ஷா, டக்கென காரில் இருந்து இறங்கி, சாலையின் இருபுறமும் திரண்டிருந்தவர்களை சந்தித்து கையசைத்தார்.. வாழ்த்தும் கூறினார். எனினும் இந்த சம்பவத்தினால், பாஜக தொண்டர்கள் அப்செட்டானார்கள்.. மின்வெட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக தொண்டர்கள், ஏர்போர்ட் வாயிலிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர்..

அப்போது பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இந்த விவகாராம் வெடித்து கிளம்பியதையடுத்து, மின்வாரியம் உடனடியாக ஒரு விளக்கத்தை தந்திருந்தது. அதில், “மின் பழுது காரணமாக திடீரென மின்வெட்டு ஏற்பட்டுவிட்டது, எனினும், அவை உடனே சரிசெய்யப்பட்டது என்று கூறியிருந்தது. ஆனாலும், உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது..

டிஜிபி சைலேந்திர பாபு: அத்துடன், இதற்கான விளக்கத்தை தர அறிக்கையாக தர வேண்டும் என்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு மத்திய உள்துறை சார்பாகவும் நோட்டீஸ் வந்து சேர்ந்தது. இதையடுத்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும், மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், முக்கிய பிரமுகர்கள், வருகை தந்தால், முதலில் தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும்.. முக்கிய பிரமுகர்கள் பிரதான அரசு நிகழ்வுகளின் போதும், மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதிலும், விஐபி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முடிவுகள்: அமித்ஷா வந்தபோது ஏற்பட்ட கரண்ட் கட்டால், இத்தனை களேபரங்களும், சர்ச்சைகளும், அதையொட்டிய முக்கிய முடிவுகளும் அடுத்தடுத்து அப்போது வெளியாகியிருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா..

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தொடங்கிவைக்கிறார். பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்திலேயே இரவு தங்குகிறார்.. இதையடுத்து, அமித்ஷா பங்கேற்கும் இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க மின் வினியோக பணியில் முழு கவனம் செலுத்துமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு: இதற்காக மின் வழித்தடங்கள் துணை மின் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் கூடுதல் பொறியாளர்களும் ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மஞ்ச கலரு ஜிங்குச்சா…. கலைஞருக்கு பிடித்த மஞ்சள் – இனி அரசு பஸ்கள் மஞ்சள்…

Next Post

அண்ணாமலை அழைப்பு ஏற்பு – தேமுதிக பங்கேற்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணாமலை அழைப்பு ஏற்பு – தேமுதிக பங்கேற்பு..

அண்ணாமலை அழைப்பு ஏற்பு - தேமுதிக பங்கேற்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In