டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் (மின்மாற்றி) போலீஸ்காரர் உள்பட 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்னாந்தா ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் இன்று ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் டிரான்ஸ்பார்மர் அருகே நின்ற போலீஸ்காரர் உள்பட 10 பேர் பலியாகினர். மேலம் பலத்த காயமடைந்து பலர் உயிருக்கு போராடினார்கள். தங்களை காப்பாற்றும்படி அவர்கள் கதறினர்.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்யப்பட்டது. விரைவாக ஆம்புன்ஸ் வாகனம் வந்தது. இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மின்வாரிய பணியாளர்கள், அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இருப்பினும் டிரான்ஸ்பார்மர் வெடிப்புக்கான சரியான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், ‛‛டிரான்ஸ்பார்மர் வெடித்தததில் பிபால்கோட்டி அவுட்போஸ்டில் பணியாற்றி போலீஸ்காரர் உள்பட மேலும் சிலர் இறந்துள்ளனர்” என்றார். இதுபற்றி சாமோலி மாவட்ட எஸ்பி பர்மேந்திரா தோவல் கூறுகையில், ‛‛டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 10 பேர் இறந்துள்ளனர” என இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தார்.


இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க காரணம் மின்சார வாரியத்தின் கவனக்குறைவும் பணியில் ஏற்பட்ட அலட்சியமும் தான் காரணம் இதற்கு சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தின் அந்த ஏரியா என்ஜினியர் இவரே பொறுப்பு காவல்துறையினர் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசின் வேலையும் வழங்க வேண்டும் இது சட்டம்