Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை வேளச்சேரியில் போலி பட்டா மூலம் ரூ.71 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
சென்னை வேளச்சேரியில் போலி பட்டா மூலம் ரூ.71 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை வேளச்சேரியில் போலி பட்டா மூலம் ரூ.71 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் லட்சுமணன். சென்னையில் சொத்துவாங்க முடிவு செய்த அவர்,புரோக்கர் ராஜா என்பவர் மூலம் வேளச்சேரி, ராமகிரி நகர், 2-வது தெருவில் 5 வீடுகள் இருந்த இடத்தை பார்த்துள்ளார்.

அந்த இடத்தின் சொந்தக்காரர்களான பிரியாவிஷா, அவரது கணவர் ஷாகுல்ஹமீத், காஜா மொய்தீன், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோரை சந்தித்து ரூ.2.10 கோடிக்கு பேசி முடித்துள்ளார்.

அதில், ரூ.71 லட்சம் கொடுத்து விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளார். இடத்துக்கான பட்டாவை பார்த்தபோது, பட்டா அவர்கள் பெயரில் இல்லாமல் இருப்பதும், 2400 சதுர அடிக்கு 1,506 சதுர அடிக்கு மட்டுமே பட்டா இருப்பதும் தெரியவந்துள்ளது.

போலி பட்டாவை கொடுத்து ரூ.71 லட்சம் பெற்று கொண்டு, இடத்தை பத்திரப்பதிவு செய்து தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் இருந்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு லட்சுமணன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரியாவிஷா மற்றும் அவரது கணவர் ஷாகுல் ஹமீது ஆகியோர் திட்டமிட்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

.

Tags: கதசயதசனனதமபதபடடபலமசடமலமர.71லடசமவளசசரயல
Previous Post

பயங்கர ஷாக்.. ஒரேயொரு நொடி தான்.. திடீரெனவெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்! 10 பேர் பலி.. துயரம்

Next Post

பாஜக தோற்குமா? 26 கட்சிகள் இருக்கட்டும்! எதிர்க்கட்சி கூட்டணி எதிர்கொள்ளும் 5 மேஜர் சவால்கள்! ஆஹா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக தோற்குமா? 26 கட்சிகள் இருக்கட்டும்! எதிர்க்கட்சி கூட்டணி எதிர்கொள்ளும் 5 மேஜர் சவால்கள்! ஆஹா

பாஜக தோற்குமா? 26 கட்சிகள் இருக்கட்டும்! எதிர்க்கட்சி கூட்டணி எதிர்கொள்ளும் 5 மேஜர் சவால்கள்! ஆஹா

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த சம்பவத்தில் உள்ளே சென்று பார்த்தல் வேளச்சேரி தாசில்தார் ரூம் வேளச்சேரி சார் பதிவாளரும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். தாசில்தரும் சார் பதிவாளரும் ஆதரவு இல்லாமல் நிலவாகரிப்பு நில மோசடி செய்ய இயலாது ஆனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்ய மாட்டார்கள் இதுவே காலம் காலமாக நடந்து வருகிறது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In