Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிவகங்கை | 15 சட்டவிரோத பார்கள் மூடல்: திறந்தவெளியில் மது விற்ற 19 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சிவகங்கை | 15 சட்டவிரோத பார்கள் மூடல்: திறந்தவெளியில் மது விற்ற 19 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கிய 15 மதுக்கூடங்களை போலீஸார் மூட நடவடிக்கை எடுத்தனர். மேலும் திறந்தவெளியில் மதுவிற்ற 19 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 306 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் இயங்குவதாகவும், அங்கு அதிகாலையிலேயே மதுப்பாட்டில்கள் விற்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தன. மேலும் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் அருகே 2 மதுக்கடைகள் இயங்கும் நிலையில், அக்கடைகள் திறக்காத நேரங்களில் மதுக்கூடங்களிலும், அதனையொட்டி திறந்தவெளியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அப்பகுதியில் செயல்பட்ட 2 மதுக்கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் ஐஜி அஸ்ரா கார்க், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவின் பேரில் சிவகங்கை எஸ்பி செல்வராஜ் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் நேற்று போலீஸார் அதிரடியாக மதுக்கூடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது சிவகங்கை, மதகுபட்டி, திருப்புவனம், காளையார்கோவில் பகுதியில் தலா 2 மதுக்கூடங்கள், மானாமதுரை பகுதியில் 5, சிங்கம்புணரி, இளையான்குடியில் தலா 1 என 15 மதுக்கூடங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் மூட நடவடிக்கை எடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் திறந்தவெளியில் 19 இடங்களில் மதுப்பாட்டில்களை விற்ற 19 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 306 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

.

Tags: கதசடடவரதசவகஙகதறநதவளயலபரபரகளமடலமதவறற
Previous Post

“2026-க்குப் பின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்”- குலாம் நபி ஆசாத்

Next Post

பெண் குழந்தை என்பதால் கைவிட்ட தந்தை, அபார நினைவாற்றலால் விருதுகளை குவிக்கும் 20 மாத குழந்தை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெண் குழந்தை என்பதால் கைவிட்ட தந்தை, அபார நினைவாற்றலால் விருதுகளை குவிக்கும் 20 மாத குழந்தை! | 20-month-old child wins awards for her amazing memory

பெண் குழந்தை என்பதால் கைவிட்ட தந்தை, அபார நினைவாற்றலால் விருதுகளை குவிக்கும் 20 மாத குழந்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In