Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஒரே நொடி.. பல வீடுகள் காலி..” இமாச்சலைப் புரட்டி போடும் பெரு வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
“ஒரே நொடி.. பல வீடுகள் காலி..” இமாச்சலைப் புரட்டி போடும் பெரு வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ!
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Vigneshkumar
Published: Monday, July 10, 2023, 19:30 [IST]
சிம்லா: வட இந்தியாவில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா நகரையே இந்த கனமழை புரட்டிப் போட்டுள்ளது. இது தொடர்பான பல ஷாக்கிங் வீடியோக்கள் இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. வட இந்தியாவில் பல இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் அங்கே உள்ள பல ஆறுகளில் நீர் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. கொட்டி தீர்க்கும் கனமழை இமாச்சலப் பிரதேசம் முழுவதும் பலத்த தேசத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ளம்: பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மரம் விழுவது, மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரயில் சேவையும் அங்கே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கே வெள்ளத்தின் கோரப் பாதிப்புகளை விளக்கும் பல வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. கனமழையால் அங்கு மொத்தம் 1,694 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கே குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது நகைமுரன்.. 3ஆவது நாளாக அங்கே பல இடங்களில் குடிநீர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிம்லா அருகே சாபாவில் உள்ள பவர் ஹவுஸ் வெள்ளத்தில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். சிம்பாவுக்கு தினசரி 42 MLD தேவை என்ற நிலையில், சிம்லா நகரத்திற்கு இப்போது 11 MLD தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. Praying for Himachal. For decades it has been my abode for months every year. I have seen it getting overloaded and crumbling due to unregulated growth. Many cities including Shimla are waiting to collapse some day. pic.twitter.com/2yQLMwx5fc
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 10, 2023 பாதிப்பு: அங்கே கடும் வெள்ளத்தால் பல இடங்களில் வீடுகள் அப்படியே அடித்துச் செல்கிறது. இது தொடர்பாகவும் பல வீடியோக்கள் பரவி வருகிறது. ரயில் பாதையில் பரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், 5 இடங்களில் பாதை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 இடங்களில் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிம்லா- கல்கா பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. HRTC bus passengers saved their lives by coming out of the windows near shimla bypass chowk in Dehradun. pic.twitter.com/AhcZ1N6UGQ
— Nikhil Choudhary (@NikhilCh_) July 10, 2023 சிம்லா- கல்கா இடையேயான ரயில் சேவை மட்டுமின்றி சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையான இங்கே நிலச்சரிவு ஏற்பட்டு, மழை வெள்ளம் போல அடித்துச் செல்லும் நிலையில் இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மண் சரிவு காரணமாக இந்த பாதையைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சில இடங்களில் மக்கள் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இது மிக பெரிய ஆபத்தை அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும். மோசமான பாதிப்பு: அதேபோல அங்கே இருக்கும் பாலம் ஒன்றின் மீது வாகனங்கள் வழக்கம் போலச் சென்று கொண்டிருக்க, கீழே காட்டாற்று வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. சிம்லாவின் ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதுவும் மூடப்பட்டது. கனமழையால் மண் சரிவும் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. அங்கே அமைந்திருந்த வீட்டின் கீழே இருந்த மண் அரிந்து செல்லப்பட்ட நிலையில், அது அப்படியே சரிந்தது. இது தொடர்பான ஷாக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அடித்துச் செல்லப்பட்ட கார்கள்: அங்குள்ள நெடுஞ்சாலைகளில் எல்லாம் கனமழையால் காட்டாற்று வெள்ளம் போல நீர் அடித்துச் செல்கிறது. இதனால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட டூ வீலர்கள் மட்டுமின்றி கார்கள் கூட ஏதோ சின்ன சின்ன பொருட்களைப் போல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் திங்கு கோவில் அருகே எடுக்கப்பட்ட வீடியோவை பிடிஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மொத்தம் 44 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் திங்கு கோவில் அருகே இருக்கும் சாலை அப்படியே மண் சரிவு காரணமாக சரிகிறது. அங்கு சிம்லா பைபாஸ் சௌக் அருகே ஹரியானா மாநில அரசுக்குச் சொந்தமான பேருந்து வந்து கொண்டிருந்தது. ஓரிடத்தில் வெள்ளம் அதிகமாகச் சென்ற போதிலும், அதைக் கடந்துவிடலாம் என நினைத்து டிரைவர் வண்டியை இயக்கியுள்ளார். இருப்பினும், எதிர்பாராத விதமாகப் பாதி தூரம் வந்ததும் அது ஒரு பக்கம் கவிழ ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ந்து போன பயணிகள் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். இமாச்சல்: பெருமழை- பியாஸ்நதியின் வரலாறு காணாத வெள்ளம்- 765 சாலைகள் மூடல்! 30,000 வீடுகள் மூழ்கின!
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Hichamal flood many places are completely wiped out across the state: North India is batteling hard agains flood.
Story first published: Monday, July 10, 2023, 19:30 [IST]

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சென்னை | வேளச்சேரியில் தொழிலாளி கொலை

Next Post

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றும் முடிவை கைவிடுக: மார்க்சிஸ்ட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றும் முடிவை கைவிடுக: மார்க்சிஸ்ட்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றும் முடிவை கைவிடுக: மார்க்சிஸ்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In