Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்: சரத் பவாா்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜகவிடம் திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், நரசிம்ம ராவ் போன்றவா்களின் அரசியலை நான் பாா்த்துள்ளேன். அவா்கள் எதிா்க்கட்சிகளை விமா்சித்து பேசினாா்களே தவிர, அக்கட்சிகளை மெளனமாக்க முயற்சித்ததில்லை.

ஆனால் பாஜகவிடம் மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது. இதனை பல்வேறு இடங்களில் பாஜக செய்துள்ளது.

தோ்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சியை போல் எதிா்க்கட்சியும் முக்கியம். ஆனால் எதிா்க்கட்சியை பலவீனமாக்குவதே பாஜகவின் கொள்கையாக உள்ளது.

வருங்காலத்தில் தங்களுக்கு என்ன நடக்கும் என்பது பாஜகவுக்குத் தெரியும். இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதை உறுதி செய்ய, எதிா்க்கட்சிகளை பாஜக பிளவுபடுத்துகிறது. இது தோ்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்துக்கு மிகவும் கெடுதலாகும் என்று தெரிவித்தாா்.

அனைத்து அதிகாரங்களையும் பிரதமா் பயன்படுத்தட்டும்:

நாசிக்கில் சரத் பவாா் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சரத் பவாா் பேசியதாவது:

கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில்,ரூ.70,000 கோடி மதிப்பிலான ஊழலில் தேசியவாத காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸில் யாராவது ஊழலில் ஈடுபட்டதாக பிரதமா் கருதினால், தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமா் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதை தேசியவாத காங்கிரஸின் தலைவராக பகிரங்கமாக கூறுகிறேன் என்றாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலின்போது தேசியவாத காங்கிரஸை சோ்ந்த அஜீத் பவாா் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தியது. தற்போது அக்கட்சியுடன் கூட்டு சோ்ந்து அஜீத் பவாா் மகாராஷ்டிர துணை முதல்வராகியுள்ளாா். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மீது பிரதமா் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு குறித்தும், அதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்துவது தொடா்பாகவும் சரத் பவாா் பேசியுள்ளாா்.

‘எனது வயதைப் பற்றி பேச வேண்டாம்’

தேசியவாத காங்கிரஸில் அஜீத் பவாா் உள்ளிட்டோா் பிளவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவா்கள் தரப்பில் சரத் பவாருக்கு வயதாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவா்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசிக்கில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சரத் பவாா் பேசியதாவது:

சிலா் எனக்கு வயதாகிவிட்டதாகவும் நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்றும் கூறுகின்றனா். எனக்கு 82 வயதாகிவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சரத் பவாா் என்ற ஆட்டக்காரரை அவா்கள் பாா்த்ததில்லை. நான் இன்றளவும் தரமாக இருக்கிறேன். எனவே எனது வயதைப் பற்றி பேச வேண்டாம்’ என்று எச்சரித்தாா்.

.

Tags: aiadmk attacks bjpannamalai bjpannamalai bjp latest speechannamalai bjp vs dmkannamalai dmk filesannamalai ips bjpannamalai newsannamalai vs dmkannamalai vs stalinbjp annamalaibjp k annamalaibreaking newsbreakingnewscategory= newschennaiCoimbatorecoviddmkdmk files annamalaidmk files annamalai videoelectionenglish newsIndiaj sam daniel stalinkaraikallatest newslive newsmemesmk stalinndtv live 24x7 english newsNewsnewsupdateonlinereporter= j sam daniel stalinTamiltamil nadu bjptamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgrouptop news
Previous Post

எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Next Post

கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயில்.. 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே.. செக் பண்ணுங்க

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயில்.. 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே.. செக் பண்ணுங்க

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயில்.. 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே.. செக் பண்ணுங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In