Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயில்.. 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே.. செக் பண்ணுங்க

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயில்.. 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே.. செக் பண்ணுங்க
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Tamilnadu oi-Jeyalakshmi C
Published: Saturday, July 8, 2023, 14:35 [IST]
வேலூர்: கோவை – சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நான்கு நாட்களுக்கு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் காட்பாடியில் இருந்து கோவை வரை மட்டுமே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத பராமரிப்பு தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சென்னை செல்லும் 8 ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) ஜூலை 11,18,25 மற்றும், ஆகஸ்டு 1 செவ்வாய்கிழமைகளில் நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். அரக்கோணம், பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்கு ரயில் செல்லாது. மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து ரயில் (எண்:12679) இயக்கம் துவங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் பயணிகள் தொடர் வலியுறுத்தலால், திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே வாராந்திர ரயில் எண்:06044 இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்ததால் ரயில் இயக்கம் ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் வழியாக செல்லும். இந்த ரயிலில், 3 ஏசி., 9 படுக்கை வசதி, 5 பொது, 2 சரக்கு பெட்டி இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலம் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக, ரப்திசாஹர், ஹிம்சாகர், பாட்னா உட்பட 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை தெற்கு மத்திய ரயில்வே அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் – பரூனி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஓங்கோல் – விஜயவாடா இடையே, சிரலா ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நிற்கும்.ஸ்ரீவைஷ்ணவி தேவி கோவில் – கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நெல்லூர் – ரேணிகுண்டா இடையே குண்டூரில் 2 நிமிடங்கள் நிற்கும். எர்ணாகுளம் – பாட்னா எக்ஸ்பிரஸ் விஜயவாடா – வாரங்கல் இடையே கம்மம், வாரங்கல் – பெலம்பல்லி இடையே ராமகுண்டம் மற்றும் மன்சிர்யல் ஆகிய ஸ்டேஷன்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.இவை தவிர மேலும் 11 ரயில்கள் கூடுதலாக நின்று செல்லும் ஸ்டேஷன்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
July monthly maintenance and rail development works are going on in the areas under Chennai division. As a result, Southern Railway has announced that 8 trains to Chennai have been completely canceled and 4 trains have been partially cancelled.
Story first published: Saturday, July 8, 2023, 14:35 [IST]

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்: சரத் பவாா்

Next Post

மனைவியை கொன்று தலைமறைவு – 2 ஆண்டுக்கு பிறகு சாமியார் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மனைவியை கொன்று தலைமறைவு - 2 ஆண்டுக்கு பிறகு சாமியார் கைது

மனைவியை கொன்று தலைமறைவு - 2 ஆண்டுக்கு பிறகு சாமியார் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In