அஸ்வினி: தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் பரணி: புதிய நண்பர்களால் வரவுகளும் கிடைக்கும். பிரச்சனைகளும் வரும். கார்த்திகை: அலைச்சல் அதிகமாகும். பொருள் விரயம் ஏற்படும். ரோகிணி: விடாப்பிடியாக வியாபாரத்தை நடத்துவீர்கள்.
மிருகசீரிடம்: குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீர்கள். திருவாதிரை: தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம்: நம்பிக்கையானவர் மூலம் பிரச்சனையைச் சமாளிப்பீர்கள். பூசம்: அரசாங்க வழியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். ஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு தொழிலில் ஆதாயம் காண்பீர்கள் .
மகம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பூரம்: சகோதரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். உத்திரம்: அவசரப்பட்டு எந்த ஒரு செயலிலும் இறங்கி விட வேண்டாம். அஸ்தம்: புதிய திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.
சித்திரை: உறவினரின் பிரச்சினையிலிருந்து ஒதுங்கி இருங்கள். சுவாதி: தேவையற்ற குழப்பங்கள் தலைதூக்கி மனதைச் சங்கடப்படுத்தும். விசாகம்: அரசு வேலையில் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். அனுஷம்: தொழிலில் ஆதாயம் அதிகரித்து சொத்து சேர்க்கை உண்டாகும்.
கேட்டை: தடைகளை விலக்கி வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். மூலம்: குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பீர்கள். பூராடம்: தாய் வழி உறவுகளின் உதவியால் கடன் பிரச்சனை தீரும். உத்திராடம்: பிள்ளைகளின் நலனுக்காக புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். திருவோணம்: குடும்பத்தில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.
அவிட்டம்: இழுபறியான செயல்களை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். சதயம்: தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக ஒழித்துக் கட்டுவீர்கள். பூரட்டாதி: திறமையுடன் வேலை பார்த்தாலும் மேலதிகாரி மட்டம் தட்டுவார். உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த லோன் வங்கியிலிருந்து கிடைக்கும். ரேவதி: அவசியமான வேலையை முடிப்பதற்கு அயல்நாடு செல்வீர்கள்.

