Chennai oi-Mani Singh S
Updated: Tuesday, July 11, 2023, 7:34 [IST]
சென்னை: நடிகர் விஜய் இன்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசிக்கிறார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், சமீப காலமாக சினிமாவை தாண்டி பொது விவகாரங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தனது படத்தில் சில அரசியல் பஞ்ச் வசனம் வைத்து பேசுவதோடு, ஊழல்கள் குறித்தும் பேசி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார். தனது மக்கள் இயக்கம் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர். ரத்த தானம் முகாம், பசியால் வாடுவோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இது நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி விஜய் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்தாதோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கத் திட்டம்? ரசிகர் மன்ற நிர்வாகிகளை மீண்டும் சந்திக்கும் நடிகர் விஜய் விஜயின் இந்த செயல் அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் விதமாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், 234 தொகுதிகளில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சென்னைக்கு அழைத்து உள்ளார். சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். பனையூரில் உள்ளை இல்லத்தில் இன்று காலை 9 மணி முதல் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நிர்வாகிகளுடனான ஆலோசனையின் போது அரசியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Actor Vijay is holding a meeting with his people’s movement executives today. Actor Vijay consults with 234 constituency in-charges at his residence in Panaiyur, Chennai.

