கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மீனாட்சிபுரம் அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(48). பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி, (45), மகன் மோஹித்(18) பிளஸ் 2 முடித்து விட்டு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க, அடுத்த மாதம் செல்ல இருந்தார். பரமேஸ்வரனின் மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார்.
இந்நிலையில் பரமேஸ்வரன், சித்ராதேவி, மோஹித் ஆகிய மூவரும் பொக்லைன் இயந்திரத்துக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தங்களது ‘எம்.ஜி. காரில் நேற்று முன்தினம் சென்றனர். பெங்களூரில் உபகரணங்களை வாங்கி விட்டு மீண்டும் நேற்று பொள்ளாச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை மோஹித் ஓட்டிக் கொண்டிருந்தார்.


வாகன விபத்துக்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன எனவே வாகனத்தை ஓட்டுபவர்கள் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் ஓட்ட வேண்டும்