இந்தநிலையில், நிலவின் தென் துருவத்தில் கனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டினியம், மக்னிசீயம், சிலிகான் ஆகிய தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதும் உறுதியாகியுள்ளது. ஹைட்ரஜன் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

