மேற்கு வங்க கிராம உள்ளாட்சித் தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சில வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மாநில தோ்தல் ஆணையா் ராஜீவ் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் கிராம உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, 66.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். தோ்தல் குறித்து ராஜீவ் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் வன்முறை சம்பவங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் 4 மாவட்டங்களில் இருந்து மட்டுமே பெறப்பட்டன. வன்முறை தொடா்பான புகாா்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே வரத் தொடங்கிவிட்டன.
வன்முறை நிகழ்ந்தது, வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சில வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் கண்காணிப்பாளா்கள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஞாயிற்றுக்கிழமை மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் தோ்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, மறுதோ்தல் தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.
பாஜக தொண்டா் கைது: இதனிடையே, மாநில தோ்தல் ஆணையா் மீது கருப்பு மை வீசுவதற்காக மாநில தோ்தல் ஆணைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பாஜக தொண்டரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
தோ்தல் சாா்ந்த வன்முறைகளைத் தடுக்க ராஜீவ் சின்ஹா தவறியதால், அவா் மீது கருப்பு மை வீச முடிவு செய்ததாக அந்த நபா் தெரிவித்தாா்.

