Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கலைஞர் உரிமை தொகை.. குடும்ப தலைவிகளே இதுதான் கட்டாயம்.. இல்லாட்டி உடனே வாங்குங்க!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2023 - Updated on July 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கலைஞர் உரிமை தொகை.. குடும்ப தலைவிகளே இதுதான் கட்டாயம்.. இல்லாட்டி உடனே வாங்குங்க!
113
SHARES
182
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பிக்கும் குடும்ப தலைவிகள் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் அதாவது ஜூலை 20ம் தேதி முதல் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்குகிறது. அதன்பின்னர் ஜூலை 24-ம் தேதி முதல் முகாம்கள் நடைபெற உள்ளது. இரண்டாம் முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கடைகளில் முதற்கட்டமாக 60 சதவீதமும், இரண்டாம் கட்டமாக 40 சதவீதமும் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது- சில இடங்களில் 500 குடும்ப அட்டை உள்ள கடைகளில் முதற்கட்டமும், 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் இரண்டாம் கட்டமும் பணிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாம். வங்கி கணக்கு வேண்டுமா?: அதேநேரம் முக்கியமான விஷயத்தை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்கும்போது, வங்கிக் கணக்கு இல்லாத பயனாளர்களை வங்கிக் கணக்கு துவக்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே வங்கி கணக்கு இல்லாதவர்கள் பயப்படதேவையில்லை. உங்கள் பெயரில் வங்கி கணக்கு கண்டிப்பாக துவங்கி அதில் தான் மாதம் மாதம் பணம் வரும் படி செய்வார்கள். ஆதார் கட்டாயம்: இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இதன்படி, ஆதார் எண் உள்ள பெண்களே இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்க முடியும். ஆதார் எண் இல்லாதவர்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தில், ஆதார் எண் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து ஆதார் எண்ணை உடனே பெற்றுவிடுங்கள். சென்னையில் உள்ளோருக்கு முக்கியமான விஷயத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதனை இப்போது பார்ப்போம். “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வரும் 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடைபெறும். ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார். டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்களுக்கு முன்பாக தொடங்கும். பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற ரேஷன் கடைக்கு வரத் தேவையில்லை. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. வங்கிக் கணக்கு இல்லாத பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்தவர வேண்டும்.

சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் எடுத்துவர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் முகாம் நடைபெறும். முகாம் நடைபெறும் தெரு, வார்டு, நாள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

ஓடிபி வரும்: முகாமில், பயனாளிகளின் விரல்ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) பெறப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். 2002-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை உள்ள முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரின் மனைவி குடும்பத்தலைவியாக கருதப்படுவார். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவியாக கருதப்படுவர். இதுகுறித்து, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையின் 044-25619208, 9445477205, 1913 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆகா இது சூப்பரா இருக்கே.. வீடு தேடி வரும் விண்ணப்பம்.. ரூ.1000 மகளிர் உரிமை தொகை.. முக்கிய அறிவிப்பு அதன்படி, மண்டலம் 1- 9445190201, மண்டலம் 2- 044-25941079, மண்டலம் 3- 9445190203, மண்டலம் 4- 9445190204, மண்டலம் 5- 9445190205, மண்டலம் 6- 9445190206, மண்டலம் 7- 9445190207, மண்டலம் 8- 9445190208, மண்டலம் 9- 9445190209, மண்டலம் 10- 9445190210, மண்டலம் 11- 9445191432, மண்டலம் 12- 9445190212, மண்டலம் 13- 9445190213, மண்டலம் 14- 9445190214, மண்டலம் 15- 9445190215.” இவ்வாறு சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சென்னை | மத்திய உளவுத் துறை துணை ஆணையரின் கைப்பை திருட்டு

Next Post

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: ஐகோர்ட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: ஐகோர்ட்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: ஐகோர்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In