Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராமேசுவரம்: தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான 4.23 லட்சம் மாத்திரைகளை, அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு தங்கம், போதைப் பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை உள்ளிட்டவற்றை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மருந்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியலில் மருந்து, மாத்திரைகளும் இடம்பிடித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை மாலை தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கல்பிட்டி கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த ஒரு ஆம்னி வேனில், தமிழகத்திலிருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்டு பதுக்கிய 4.23 லட்சம் `பிரிகாபாலின்’ என்ற பெயருடைய, மனப்பதற்றத்தை தணிக்கக்கூடிய மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கொழும்பு மாவட்டம் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். மேலும், கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் இந்திய மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி எனக் கூறப்படுகிறது.

.

Tags: இரநதஇலஙகககஒரவரகடகடததபபடடகததமழகததலபறமதலமததரகளமதபபளளர.1.20
Previous Post

டெல்லியில் தொழிலதிபர் துப்பாக்கி முனையில் கொள்ளை.

Next Post

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிரான வழக்கு.. ஜூலை 7க்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிரான வழக்கு.. ஜூலை 7க்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிரான வழக்கு.. ஜூலை 7க்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In