Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் எப்போது? Bill தீட்டுவது தான் காவேரி ஹாஸ்பிடல் வழக்கமா? -ஷியாம் கிருஷ்ணசாமி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் எப்போது? Bill தீட்டுவது தான் காவேரி ஹாஸ்பிடல் வழக்கமா? -ஷியாம் கிருஷ்ணசாமி
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Arsath Kan
Published: Monday, July 10, 2023, 17:48 [IST]
சென்னை: செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் குறித்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட காவேரி மருத்துவமனைக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், சீராக நடந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகும் ஒரு மாதம் உள்நோயாளியாக வைத்து Bill ஐ தீட்டி அனுப்புவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா என ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அரசுப் பணத்தில் செந்தில்பாலாஜிக்கு மட்டும் சிறப்புச் சிகிச்சையா என விமர்சித்துள்ளார். கடந்த ஜூன் 13ஆம் தேதி காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்த தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவருக்கு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் 3 குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவு மூலம் காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். அங்கு 8 நாட்கள் ஓய்வில் இருந்த அவருக்கு ஜூன் 21ஆன் தேதி அதிகாலை இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது காவேரி மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே இவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு மீதான விசாரணை ஒரு பக்கம் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. இன்னும் 3 நாட்கள் கழிந்தால் வரும் 14ஆம் தேதியுடன் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒரு மாதம் நிறைவு பெறுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Puthiya Thamizhagam Party President Krishnasamy son Shyam Krishnasamy, has questioned to Kauvery Hospital about Senthil Balaji issue discharge.
Story first published: Monday, July 10, 2023, 17:48 [IST]

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சென்னை | வீடு புகுந்து கொள்ளை: ஒருவர் கைது

Next Post

”தமிழகத்தின் அமைதிக்கு ஆளுநர் அச்சுறுத்தலாக இருக்கிறார்” – முதல்வரின் 15 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள 15 குற்றச்சாட்டுகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
''தமிழகத்தின் அமைதிக்கு ஆளுநர் அச்சுறுத்தலாக இருக்கிறார்'' - முதல்வரின் 15 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள 15 குற்றச்சாட்டுகள்

''தமிழகத்தின் அமைதிக்கு ஆளுநர் அச்சுறுத்தலாக இருக்கிறார்'' - முதல்வரின் 15 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள 15 குற்றச்சாட்டுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In