Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”தமிழகத்தின் அமைதிக்கு ஆளுநர் அச்சுறுத்தலாக இருக்கிறார்” – முதல்வரின் 15 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள 15 குற்றச்சாட்டுகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
''தமிழகத்தின் அமைதிக்கு ஆளுநர் அச்சுறுத்தலாக இருக்கிறார்'' - முதல்வரின் 15 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள 15 குற்றச்சாட்டுகள்
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செய்திப்பிரிவு

Last Updated : 09 Jul, 2023 05:53 PM

Published : 09 Jul 2023 05:53 PM
Last Updated : 09 Jul 2023 05:53 PM

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் 15 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில். ஆளுநர் ஆர்.என்.ரவி மீது 15 குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதன் விவரம்:

  • ஆர்.என்.ரவி வெளிப்படையாகத் தமிழக அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழக அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
  • சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.
  • உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
  • ஆர்.என்.ரவி விரும்பத்தகாத, பிளவுபடுத்தும், மதரீதியான கருத்துக்களைப் பொது வெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது.
  • ஆளுநர் ஆர்.என். ரவியின் தேவையற்ற அறிக்கைகள், பேச்சுக்கள் தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.
  • தமிழக மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி, தமிழகத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார்.
  • திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும்.
  • தமிழ்நாடு” என்ற பெயரை, “தமிழகம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் ஆளுநர் தெரிவித்தார்.
  • முதலீடுகளை ஈர்க்க நான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல ஆளுநர் குறிப்பிட்டார்.
  • சிதம்பரம் குழந்தைத் திருமணம் தொடர்பான ஆளுநரின் அறிக்கை காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்தது.
  • குற்றவியல் விசாரணைக்கு இடையூறாக ஒரு சாதாரண நபர் வெளியிட்டிருந்தால், அந்த நபர் மீது உரிய காவல்துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள்.
  • அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனது நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை ஆர்.என்.ரவி சிறுமைப்படுத்தியுள்ளார்.
  • அரசியல் அமைப்பின் 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார்.
  • ஆர்.என்.ரவி, வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.
  • தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை ஆர்.என்.ரவி நிரூபித்துள்ளார்.

தவறவிடாதீர்!


.

Tags: அசசறததலகஅமதககஆளநரஇரககறரகடதததலகறபபடடளளகறறசசடடகளதமழகததனபககமதலவரன
Previous Post

செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் எப்போது? Bill தீட்டுவது தான் காவேரி ஹாஸ்பிடல் வழக்கமா? -ஷியாம் கிருஷ்ணசாமி

Next Post

ஜோலார்பேட்டையிலே “அதை” நோட் பண்ணீங்களா? பாஜகவை “கிறுகிறுக்க” வைத்த திமுக.. போயும் போயும் அங்கேயுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜோலார்பேட்டையிலே “அதை” நோட் பண்ணீங்களா? பாஜகவை “கிறுகிறுக்க” வைத்த திமுக.. போயும் போயும் அங்கேயுமா?

ஜோலார்பேட்டையிலே "அதை" நோட் பண்ணீங்களா? பாஜகவை "கிறுகிறுக்க" வைத்த திமுக.. போயும் போயும் அங்கேயுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In