Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆர்.டி.ஐயில் தகவல் கேட்டதுக்கு அதிகாரி செய்த சம்பவம்.. 40 ஆயிரம் பக்கம்.. அதிர்ந்து போன நபர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஆர்.டி.ஐயில் தகவல் கேட்டதுக்கு அதிகாரி செய்த சம்பவம்.. 40 ஆயிரம் பக்கம்.. அதிர்ந்து போன நபர்!
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

போபால்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக சில விவரங்களை கேட்டுள்ளார்.

இதற்கு 40 ஆயிரம் பக்கங்களில் தகவல்களை அளித்து கேட்டவரை ஒரு நொடி மிரளவைத்து இருக்கிறார்கள் ஆர்.டி.ஐ. அதிகாரிகள். அரசு அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை சாதாரண பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் எந்தவொரு நபரும் அரசின் அமைப்பிலிருந்து தகவல்களைக் கோரலாம்.

உடனடியாகவோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ பதிலளிக்க வேண்டும். சில விதி விலக்குகளில் மட்டுமே தகவல்களை தர அனுமதி மறுக்க முடியும். பல்வேறு சமூக ஆர்வலரும் அரசின் திட்டங்கள் பற்றியும், குறிப்பிட்ட திட்டத்திற்கு ஆன செலவு எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பற்றியும் ஆர்.டி.ஐ மூலமாக கேட்டு பெறுவது வழக்கமாக உள்ளது. இதனால், திட்டங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தாலோ, அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் கூட வெளிச்சத்திற்கு வருகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். மத்திய பிரதேச மாநிலத்தில், தர்மேந்திர சுக்லா என்பவர் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக ஆர்.டி.ஐ மூலமாக விவரங்கள் கேட்டுள்ளார்.

இதற்கு 40 ஆயிரம் பக்கங்களில் தகவல்களை அளித்து கேட்டவரை ஒரு நொடி மிரளவைத்து இருக்கிறார்கள் அதிகாரிகள். இது குறித்து தர்மேந்திர சுக்லா கூறுகையில், “கொரோன பெருந்தொற்று காலத்தில் வாங்கப்பட்ட மருந்துகளுக்காக விடப்பட்ட டெண்டர்கள் மற்றும் பில் பேமேண்ட் விவரங்கள் ஆகியவற்றின் விவரங்களை கேட்டு நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஒரு மாதம் ஆன பிறகும் எனக்கு பதில் வராததால் மேல் முறையீட்டு அதிகாரி சரத் குப்தாவிடம் முறையிட்டேன். அவரும் எனது மனுவை ஏற்றுக்கொண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கான பதிலை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தபட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். ஒருமாத காலக்கெடுவை கடந்து விட்டதால், பதிலை அளிப்பதற்காக எந்த கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டு இருந்தார். மேல் முறையீட்டு அதிகாரியின் உத்தரவுக்கு பிறகு நான் கேட்ட கேள்விகளுக்கான பதிலை அதிகாரிகள் வழங்கினர். ஆனால், அங்குதான் எனக்கு ஒரு அதிர்ச்சியே காத்திருந்தது.

40 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பதில்களை எனக்கு அளித்தனர். மலைபோல் குவிந்து இருந்த இந்த பேப்பர் கட்டுக்களை கொண்டு செல்வதற்காக எனது எஸ்.யூ.வி காரை எடுத்து வந்தேன். டிரைவர் இருப்பதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு கார் முழுவதும் பேப்பர் கட்டுக்களை நிரப்பி வைத்தோம்” என்றார். அதிமுகவை குறை சொன்ன திமுக.. ரூ.2.20 லட்சம் கோடி கடன்.. தமிழ்நாடு திவாலாகும்.. எச்சரிக்கும் அன்புமணி இது குறித்து மேல் முறையீட்டு அதிகாரியான மாநில சுகதாரத்துறையின் இணை இயக்குனர் சரத் குப்தாவிடம் கேட்ட போது, ஆர்.டி.ஐ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளித்தால், அளிக்கப்படும் ஆவணத்திற்கான செலவு தகவல் பெறுபவரிடம் இருந்து பெறப்படும். ஆனால், 30 நாட்களை கடந்து விட்டதால், இலவசமாக வழங்க உத்தரவிட்டேன். உரிய நேரத்தில் தகவல்களை அளிக்காமல் அரசு கருவூலத்திற்கு ரூ 80 ஆயிரம் இழப்பு ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட ஊழியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் ஆளுநர், முதல்வர் நாடகம்: நாராயணசாமி

Next Post

தமிழகத்தில் புலிகள் எண்ணிகை அதிகரித்துள்ளது.. “பாதுகாக்க உறுதியேற்போம்” முதல்வர் ட்வீட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் புலிகள் எண்ணிகை அதிகரித்துள்ளது.. “பாதுகாக்க உறுதியேற்போம்” முதல்வர் ட்வீட்

தமிழகத்தில் புலிகள் எண்ணிகை அதிகரித்துள்ளது.. "பாதுகாக்க உறுதியேற்போம்" முதல்வர் ட்வீட்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    வாழ்க்கையில இனி தகவலை அவர் கேட்கக் கூடாது அப்படி என்கிறதுக்காக நாற்பதாயிரம் பக்கம் கொண்ட தகவல்களை கொடுத்திருக்காங்க

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In