கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்றை வைத்துள்ள இவர், அதில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து வைத்திருந்து பண்டிகை நாட்களில் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அவர் சிவகாசியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கி தனது கிடங்கில் இருப்பு வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அந்த கிடங்கின் மாடியில் வெல்டிங் பணி நடந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த வாசிம் ஹரிகர்(32) என்ற தொழிலாளி பணியில் ஈடுபட்டிருந்தார். வெல்டிங் செய்த போது ஏற்பட்ட தீப்பொறி பட்டாசுகள் மீது விழுந்ததில் பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்து வெடித்துச் சிதறத் தொடங்கியது.
அதையடுத்து உடனடியாக வாசிம் ஹரிகர் முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

