கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை மீனவர்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடல் அட்டையும் ஒன்றாகும். இந்நிலையில் மண்டபம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர், வன உயிரின காப்பகத்தினர், கடலோர சிறப்பு படையினர் உள்ளிட்டோர் இணைந்து மண்டபம் வடக்கு கடற்கரையில் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 242 கிலோ கடல் அட்டைகள் மற்றும் உயிருடன் கூடிய 325 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மண்டபத்தை சேர்ந்த பூ மரைக்காயர், காதர் ஆகிய இருவரை கைது செய்தனர்.

