Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆஹா.. வேறலெவலில் மாறுதே.. வில்லிவாக்கம் ஏரி.. சென்னை மக்களே சூப்பர் விஷயம் இருக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆஹா.. வேறலெவலில் மாறுதே.. வில்லிவாக்கம் ஏரி.. சென்னை மக்களே சூப்பர் விஷயம் இருக்கு!
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் எதற்கும் பயன்படாமல் இருந்த வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் பணிகளை முடித்து நவம்பருக்குள் ஏரியை திறக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பகுதியில் 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 32 குளங்கள் மற்றும் ஏரிகள், சென்னை ஸ்மார்ட்சிட்டி நிதியிலிருந்து புனரமைப்பு பணிகள் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து ஸ்மாட்சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் – சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நீர்நிலையாகும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு சொந்தமானது. ஆனால் குடிநீருக்கு சுத்தமாக பயன்படுவது இல்லை. இந்த ஏரியை முறையாக புனரமைத்தால் வில்லிவாக்கம் பகுதியில் ஒரு பிரதான நீர் நிலையாக மாறும் என்றும், இதன் மூலம் வில்லிவாக்கம் பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை மாநகராட்சி முன்பு கூறியிருந்தது.

அதன்படியே சென்னை மாநகராட்சி வில்லிவாக்கம் ஏரி கொள்ளளவை 20 ஆயிரம் கனமீட்டரில் இருந்து 70 ஆயிரம் கனமீட்டராக அதிகரிக்கவும், ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடை பயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், வேலி, திறந்தவெளி திரையரங்குகள் ஆகியவற்றை அமைப்பது, இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மின்கழிப்பறை வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 2019ம் ஆண்டு முடிவு செய்தது.

அதன்படியே பல்வேறு பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை வில்லிவாக்கம் ஏரியில் நடந்து வந்தது. வில்லிவாக்கம் ஏரியின் நடுவில் நடந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரி தூர்வாரப்பட்டு நீர் நிறைந்துள்ளது. ஏரியில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 39 ஏக்கர் பரப்பிலான வில்லிவாக்கம் ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. மாசுபட்டுக் கிடந்த இந்த ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சென்னைமாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் மறுசீரமைப்பு பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர் திட்ட மதிப்பீடு ரூ.45 கோடியாக உயர்ந்தது. சீரமைப்பு பணிக்காகச் சென்னை குடிநீர் வாரியம் தன்வசம் 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு (கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க), மீதம் உள்ள 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்தது. எப்புட்றா.. சென்னை வில்லிவாக்கம் ஏரியா இது! சூப்பராகிடுச்சு,ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அசத்தல் அறிவிப்பு அப்போது அந்த ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியில் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. அதன் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரையரங்கம், நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வில்லிவாக்கம் ஏரியில் சென்னையின் முதல் கண்ணாடி தொங்கு பாலம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில், ரூ.8 கோடி செலவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஏற்கனவே சீரமைக்கப்பட்டு வரும் ஏரி ஒரு புறம் எனில், புதிதாக கழிவு நீர் வாரியத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ள 8.5 ஏக்கர் நிலத்தில் (வில்லிவாக்கம் ஏரி பகுதியில் தான்) புதிய ஏரி அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.7.50 கோடியில் இந்த ஏரி உருவாக்க திடடமிட்டுள்ளனர்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

குழந்தை விற்பனை வழக்கு: செவிலியர் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

Next Post

’நியோ- மேக்ஸ்’ நிறுவன மோசடி: மதுரையில் எல்ஐசி முன்னாள் அலுவலர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’நியோ- மேக்ஸ்’ நிறுவன மோசடி: மதுரையில் எல்ஐசி முன்னாள் அலுவலர் கைது

’நியோ- மேக்ஸ்’ நிறுவன மோசடி: மதுரையில் எல்ஐசி முன்னாள் அலுவலர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In