Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகளிர் வரும் 2 மெசேஜ்! உங்களுக்கு இந்த எஸ்எம்எஸ் வந்தா.. உடனே சுதாரியுங்க..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகளிர் வரும் 2 மெசேஜ்! உங்களுக்கு இந்த எஸ்எம்எஸ் வந்தா.. உடனே சுதாரியுங்க..
49
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த பெண்கள் எல்லோருக்கும் 2 விதமான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

இதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் நடக்கின்றன. குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரமாக வீடு வீடாக வழங்கப்படுகின்றன.

அதேபோல் இதற்கான டோக்கனும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த பெண்கள் எல்லோருக்கும் 2 விதமான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மெசேஜ் 1: இந்த முகாம்களில் ரேஷன் கார்ட் அவசியமாக கேட்கப்படுகிறது. அதேபோல் ஆதார் சீடிங் செய்ய ஆதார் கார்டு , அதோடு இணைக்கப்பட்டு உள்ள போன் நம்பர் அவசியமாக கேட்கப்படுகிறது.

இதை வைத்து பெறப்பட உள்ள ஓடிபி கேட்கப்படுகிறது. பெண்கள் விண்ணப்பத்தை பெண்கள் பூர்த்தி செய்துள்ளனர். அதேபோல் டோக்கனில் நம்பர் இருப்பதால் நேராக குறித்த நேரத்திற்கு முகாமிற்கு வர வேண்டும். அதன்பின் அங்கே அதிகாரியிடம் ஆதார் நம்பரை கூறினால், நமக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி சொல்லிவிட்டு விண்ணப்பத்தை கொடுக்கும் அளவிற்கு இந்த செயல்முறைகள் எளிதாக உள்ளன. அதனால் முகாம்களில் பெரிய அளவில் கூட்ட நெரிசல்கள் இல்லை. இதையடுத்து நம்முடைய அப்ளிகேஷன் பெறப்பட்டதும், அது பெறப்பட்டுவிட்டது என்ற மெசேஜ் அனுப்பப்படும். இது முதல் மெசேஜ்.

மெசேஜ் 2: இந்த கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான மெசேஜும் வரும். இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மெசேஜ் வரும். நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும். இதற்கு என்று ஒரு இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும். கட்டணம் இல்லா பேருந்து பயணம் மூலம் 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகையை செப்டம்பர் மாதத்தில் இருந்து தர இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 1 கோடி மகளிர் மாதம் முழுக்க 1000 ரூபாய் பெற உள்ளனர். இது இல்லாமல் நான் கலந்து கொண்ட பல கூட்டங்களில் முக்கிய பல உதவிகளை செய்து அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, 63 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றுக்குறையை தற்போது 30 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.1 விழுக்காடாக உயர்ந்து உள்ளது. துறை வாரியாக என்னால் சாதனைகளை அடுக்க முடியும். இன்னும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம். எங்களுக்கு எதிராக வதந்தி பரப்ப நினைத்தவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர், என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

விருதுநகரில் மருதுசேனை மாநில நிர்வாகி கொலை; 15 பேர் மீது வழக்கு

Next Post

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: திமுகவினர் மீதான 2-வது ஊழல் பட்டியலை வெளியிட்டார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: திமுகவினர் மீதான 2-வது ஊழல் பட்டியலை வெளியிட்டார்

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: திமுகவினர் மீதான 2-வது ஊழல் பட்டியலை வெளியிட்டார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In