Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கோட்டையில் ஓட்டை”.. தர்மசங்கடத்தில் முதல்வர் ஸ்டாலின்..அப்ப அமைச்சர் பதவியை “அவர்” ராஜினாமா பண்றாரா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
“கோட்டையில் ஓட்டை”.. தர்மசங்கடத்தில் முதல்வர் ஸ்டாலின்..அப்ப அமைச்சர் பதவியை “அவர்” ராஜினாமா பண்றாரா
45
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: செந்தில் பாலாஜி விஷயத்தில் திமுக அதிர்ந்து போயுள்ளதாக தெரிகிறது.. இது சம்பந்தப்பட்ட முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடரவே தமிழக அரசு விரும்பியது.. அதனால்தான், இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும்கூட, “இலாகா இல்லாத அமைச்சராக” செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

எனினும், திடீரென செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக இரவோடு இரவாக, ஆளுநர் ரவி அறிவிப்பை ஒன்றை வெளியிடவும், அரசியல் களத்தில் பரபரப்பை அது ஏற்படுத்தியிருந்தது..

ஆளுநர் ரவி: நாலாபுறமும் கண்டனங்கள் எழுந்த நிலையில், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நள்ளிரவில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார். எப்போதுமே, கவர்னரிடமிருந்து ஒரு உத்தரவு போடப்பட்டு விட்டால், கவர்னரே நினைத்தாலும் அதை திரும்ப பெற முடியாது. அதனால் தான், அந்த அறிவிப்பினை வாபஸ் என்று சொல்லால் “நிறுத்தி வைப்பதாக” சொல்லப்பட்டது. இதையடுத்து, கவர்னரின் செயல்களுக்கு எதிராக வழக்கு போடலாமா? என்று குற்றவியல் வழக்கறிஞர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசின் நிர்வாகம் சார்ந்த விவகாரங்களில் கவர்னருக்கு எதிராக வழக்குப் போட முடியாது,

வேண்டுமானால் கவர்னரின் செயலாளரை கோர்ட்டுக்கு அழைக்க முடியும் என முதல்கட்டமாக சில தகவல்களை முதல்வருக்கு வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தார்களாம்.. உத்தரவுகள்: அதேசமயம், கவர்னருக்கு எதிரான விவகாரங்கள் ஏதேனும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருக்கிறதா? அதில் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா?

என்பதை மூத்த வழக்கறிஞர்கள் ஆராய்ந்தும் வருகின்றனர். திமுக தரப்பு இப்படி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேசமயம், ஆளுநர் டெல்லி பக்கம் கிளம்பி சென்றுவிட்டார். அமித்ஷா உள்ளிட்டோரையும் சந்தித்து, செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.. இதற்கு அமித்ஷாவும், அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுமாறு ஆளுநருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியிருந்ததாக சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், கவர்னரை சமீபத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தார் தலைமை செயலாளர். அப்போது, இந்த விவகாரங்கள் அனைத்துமே விவாதிக்கப்பட்டுள்ளது.. 3வது நீதிபதி: இதனிடையே, மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பானது, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமைந்துவிட்டது.. எனவே, அவரிடம் விசாரணை நடத்த மூன்றாவது நீதிபதியும் அனுமதித்தார்.. அத்துடன், மருத்துவமனையிலிருந்த நாட்களை நீதிமன்ற காவல் கணக்கில் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டார்..

இந்த நீதிமன்ற உத்தரவினை திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்போது, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை, முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என்கிற நெருக்கடி உள்ளாக்கி இருக்கிறார்.. அதனால், தன்னுடைய பதவியை செந்தில் பாலாஜியே, வலியவந்து ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தப்படுகிறதாம்.. இது குறித்து விஷயங்களும் நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். சாதனை: ஒருவேளை செந்தில்பாலாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும்பட்சத்தில், இதையும் பாஜக தன்னுடைய சாதனையாக நெஞ்சுயர்த்தி பேசும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..

செந்தில் பாலாஜி விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக, சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது.. தமிழகத்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும்கூட, போதுமான அளவுக்கு எதிர்வினை ஆற்றவில்லை என்கிறார்கள். இதற்கு காரணம், அதிமுக ஆட்சிக்காலத்தில்தான், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. ஸ்கோர்: எனவே, திமுகவை முழுமையாக கண்டிக்கவும் முடியாமல், பாஜகவை சமாளிக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளியாய் அதிமுக இருப்பதாக தெரிகிறது..

எப்படி பார்த்தாலும், செந்தில் பாலாஜி விஷயத்தில் “ஸ்கோர்” செய்தது பாஜகதான் என்பதை மறுப்பதற்கில்லை.. “செந்தில் பாலாஜி ராஜினாமா” என்ற விஷயத்தை திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதையும் பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

பாலியல் வன்கொடுமையால் சிறுமி தற்கொலை; பள்ளி தாளாளருக்கு ஆயுள்: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

”பொது சிவில் சட்டம் அரசியலமைப்பை சீர்குலைத்துவிடும்” – சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
''பொது சிவில் சட்டம் அரசியலமைப்பை சீர்குலைத்துவிடும்'' - சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

''பொது சிவில் சட்டம் அரசியலமைப்பை சீர்குலைத்துவிடும்'' - சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In