Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‛மணிப்பூர் பைல்ஸ்’ எப்போது? காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு வந்த கேள்வி! ராகுலை இழுத்து பரபர பதில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
‛மணிப்பூர் பைல்ஸ்’ எப்போது? காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு வந்த கேள்வி! ராகுலை இழுத்து பரபர பதில்
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: காஷ்மீரில் 1990 காலத்தில் காஷ்மீரி பண்டித்கர் வெளியேறியது குறித்து ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ என திரைப்படம் எடுத்து பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற இயக்குனர் விவேக் அக்னி கோத்ரி. இந்நிலையி்ல தான் ‛மணிப்பூர் பைல்ஸ்’ படம் எப்போது? என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு குக்கி பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அதேபோல் மைத்தேயி மக்களும் வசிக்கின்றனர். இதற்கிடையே தான் மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி குக்கி-மைத்தேயி மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கூறும் நிலையில் அதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதான் மோதலுக்கு காரணமாகி வன்முறையாக மாறியுள்ளது.

இந்த வன்முறை கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் பைனோம் எனும் கிராமத்தில் 2 குக்கி பழங்குடி பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீடியோவாக வெளியாகி வெளியுலகிற்கு தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று கல்லூரி மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் கடந்த 2 நாட்களாக முடங்கிபோனது. தற்போதைய மணிப்பூர் வன்முறையில் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வரை பிற மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ போல் ‛தி மணிப்பூர் பைல்ஸ்’ என்ற பெயரில் படம் எடுக்க வேண்டும் என ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குனர் விவேக் அக்னி கோத்ரியிடம் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதாவது ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் 11ல் வெளியானது. 1990 காலக்கட்டத்தில் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டித்கள் வெளியேறியதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு பாஜகவினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் வரி விலக்கு வழங்கப்பட்டது. அதோடு‛தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட குழுவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் விவேக் அக்னிகோத்ரி ‛தி காஷ்மீர் பைல்ஸ் அன் ரிப்போர்ட்டட்’ என்ற பெயரில் டிரெய்லரையும் வெளியிட்டுள்ளார். இது ஜி5ல் விரைவில் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் விவேக் அக்னிகோத்ரியிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாண்டெடர் அலி என்பவர், ‛‛உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் மனிதராக இருந்தால் உடனடியாக மணிப்பூர் பைல்ஸ் திரைப்படத்தை உருவாக்குங்கள்” என தெரிவித்து இருந்தார். அதற்கு விவேக் அக்னிகோத்ரி “என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஆனால் என்னிடமிருந்து மட்டும் தான் படங்கள் கிடைக்குமா? உங்கள் ‘டீம் இந்தியா’வில் படத் தயாரிப்பாளர் இல்லையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் தான் டீம் இந்தியாவில் படத்தயாரிப்பாளர் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் சோயிப் ஆரிப் கான் என்பவர், ‛‛மணிப்பூரில் ‛மணிப்பூர் பைல்ஸ்’ எனும் புதிய படப்பிடிப்பை தொடங்க வேண்டும்” என விவேக் அக்னி கோத்ரியிடம் தெரிவித்து இருந்தார். அதற்கு அவர், ‛‛கான் சாஹிப், ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரையில் ஏராளமான திரைப்பட தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் படம் எடுக்க மாட்டார்களா? அல்லது உண்மையை வெளிப்படுத்தும்போது என்னை மட்டும் நம்புகிறீர்களா?” என பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்: சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் நடக்கிறது

Next Post

அமலாக்க துறை மோடி மீதும் பாயும் காலம் வரும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமலாக்க துறை மோடி மீதும் பாயும் காலம் வரும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை

அமலாக்க துறை மோடி மீதும் பாயும் காலம் வரும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In