Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மூஞ்ச பாரு… பார்க்கவே பயமா இருக்கே.. சீனாவில் திடீரென நடக்கும் “சம்பவம்!”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மூஞ்ச பாரு… பார்க்கவே பயமா இருக்கே.. சீனாவில் திடீரென நடக்கும் “சம்பவம்!”
45
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெய்ஜிங்: சீனாவில் இப்போது பல இடங்களில் இதுபோல பார்க்கவே பயமாக இருக்கும் முகமூடிகளை அணிந்து கொண்டு மக்கள் செல்கிறார்கள். இதற்குச் சர்வதேச கனெக்ஷனும் கூட இருக்கிறதாம். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். சீனாவில் கடந்த சில காலமாகவே முகமே தெரியாத அளவுக்கு கலர் கலராக முகமூடி போன்ற ஒன்றை முகத்தில் அணிந்தபடியே மக்கள் வெளியே வருகிறார்கள். இது பார்க்கவே உண்மையில் அச்சமாகவே இருக்கிறது. முகமூடி கொள்ளையர்களாக இருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

இதற்கான காரணத்தையும் பின்னால் இருக்கும் சர்வதேச கனெக்ஷன்களையும் நாம் இதில் விரிவாகப் பார்க்கலாம். முகமூடி: வெளியே வரும்போதெல்லாம் இப்படி கலர் கலராக அங்குள்ள மக்கள் முகமூடியை எதற்காக போடுகிறார்கள் தெரியுமா.. வெயில் தான் அதற்குக் காரணம். அதீத வெப்பத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றவே இப்படிச் செய்கிறார்கள். அங்குத் தொடர்ந்து வெப்பம் உச்சத்தைத் தொடும் நிலையில், ஃபேஸ்கினிஸ் (Facekinis) அல்லது முழு ஃபேஸ் மாஸ்க்குகளுக்கு தேவை சீனாவில் அதிகரித்துள்ளது. இதற்கும் என்ன சர்வதேச கனெக்ஷன் எனக் கேட்கிறீர்களா.. தொடர்ந்து படியுங்கள் புரியும். சீனாவில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொடும் நிலையில், இந்த ஃபேஸ்கினிஸ் தான் மக்களைப் பாதுகாக்கிறதாம்.

இந்த முகமூடியில் கண்கள் மற்றும் மூக்கிற்கு மட்டுமே துளை இருக்கும். அதீத வெப்பம், புற ஊதா கதிர்கள் மற்றும் தோல் புற்றுநோயில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்ற அதிகப்படியான நபர்கள் இந்த ஃபேஸ்கினிஸை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் அதன் விற்பனை உச்சம் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. என்ன காரணம்: இந்த பேஸ்கினிஸ் பொதுவாக பாலியஸ்டர் போன்ற இலகுவான துணிகளில் இருந்து செய்யப்பட்டதாக இருக்கும் சீனாவின் சில இடங்களில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறதாம். இதனால் சீன மக்கள் எங்குச் சென்றாலும் கையடக்க மின்விசிறிகள் உடன் தான் வெளியே செல்கிறார்களாம். அங்கே மின்விசிறியுடன் இருக்கும் தொப்பிகளும் இப்போது அதிகம் விற்பனையாகிறதாம். கொதிக்கும் வெயில் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்தான தோல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பெரும்பாலான மக்கள் இதுபோன்ற பேஸ்கினிஸ் அணிகிறார்கள்.

இது நேரடியாகச் சூரிய ஒளி நமது சருமத்தைப் படுவதைத் தடுப்பதால் தீவிரமான தோல் பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கிறது. இந்த பேஸ்கினிஸ் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறதாம். சீனாவில் இதன் விற்பனை அதிகரிக்க மற்றொரு காரணமும் இருக்கிறது.

மற்றொரு காரணம்: அதாவது சீனா உட்பட கிழக்கு ஆசியாவில் உள்ள பல பெண்கள் தங்கள் தோல் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இதை நாம் பார்க்கலாம். இது போல தொடர் விளம்பரங்கள் இங்குள்ள பெண்களைக் குறிவைத்து வருவதே இதற்குக் காரணமாகும்.. இதனால் மற்ற நாடுகளைக் காட்டிலும் அழகுசாதன பொருட்கள் இங்கே அதிகம் விற்பனையாகும். என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கனெக்ஷன்: உலகெங்கும் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் வெப்பம் அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பல முக்கிய நகரங்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் மூழ்கிவிடும்.  பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என உலக நாடுகள் சொன்னாலும் கூட அது வெறும் பெயரளவிலேயே இருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

செ பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு முடித்துவைப்பு..! டெல்லியயே இனி பார்த்துக்க சொன்ன சென்னை..

Next Post

ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு.- 812 டிசிசி பணியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 812 டிசிசி பணியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு

ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு.- 812 டிசிசி பணியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In