
விழுப்புரம்: பெண் எஸ்.பி.,,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்குஉடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.

