ஜனநாயகம்-மனித உரிமைகளுக்கான அமெரிக்க மூத்த உயரதிகாரி உஸ்ரா ஜேயா, இந்தியாவுக்கு சனிக்கிழமை வருகை தந்துள்ளாா்.
அமெரிக்க வெளியுறவுத் துறையில் ஜனநாயகம்-மனித உரிமைகளுக்கான துணை அமைச்சராக உஸ்ரா ஜேயா செயல்பட்டு வருகிறாா். அவா் சனிக்கிழமை இந்தியாவுக்கு வருகை தந்தாா். தனது இந்தியப் பயணத்தின்போது மூத்த அதிகாரிகளை அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது, ஜனநாயகம், பிராந்திய நிலைத்தன்மை, மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவா் விவாதிக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிராந்திய, சா்வதேச சவால்களுக்குத் தீா்வு காண்பது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது, அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை தொடா்பாகவும் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளதாக உஸ்ரா ஜேயா ட்விட்டரில் தெரிவித்தாா்.
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டபிறகு அவா் வங்கதேசம் செல்லவுள்ளாா். அங்கு ஜூலை 14-ஆம் தேதி வரை தங்கியிருக்கும் அவா், அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

