Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒரே நாளில் 10 டாப் கம்பெனிகள்.. உச்சபட்ச வேகத்தில் தமிழ்நாடு.. இதுதான் ரியல் வளர்ச்சி.. குட் நியூஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஒரே நாளில் 10 டாப் கம்பெனிகள்.. உச்சபட்ச வேகத்தில் தமிழ்நாடு.. இதுதான் ரியல் வளர்ச்சி.. குட் நியூஸ்
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழ்நாட்டில் 6000 கோடி முதலீட்டில் 10 டாப் நிறுவனங்களின் தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளித்து அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

நேற்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக, வழங்கப்படக்கூடிய அந்த ஓய்வு ஊதியங்கள், இப்போது வழங்கக்கூடிய 1000/- ரூபாயிலிருந்து 1200/- ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றிருக்கக்கூடிய இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியினை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பொதுவாக தமிழ்நாட்டிலே நான் குறிப்பிட்டது போல, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கையிலிருந்து வந்திருக்கக்கூடிய மக்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் வந்திருக்கிறது.

இந்த ஓய்வூதியத் திட்டங்களுடைய வரலாற்றை நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோம் என்று சொன்னால், 1962-ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைக்கு மாதத்திற்கு ரூபாய் 20/- அன்றைய சூழ்நிலையில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு இந்தத் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

1962-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை பல்வேறு காலக் கட்டங்களில் இந்த ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1000/- மாத ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம், கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1,000/- ரூபாயாக வழங்கப்பட்டு வந்த அந்த மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,500/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள். இது தவிர, முதியோர் உதவி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றக்கூடியவர்களுக்கும் நாம் ஓய்வூதியம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இது ஒட்டுமொத்தமாக, எல்லா சமூக பாதுகாப்பு திட்டங்களிலிருந்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஏறத்தாழ 30 இலட்சத்து 55 ஆயிரத்து 857 பயனாளிகள் இந்த மாதாந்திர ஓய்வூதியங்களை பெற்று வருகிறார்கள். ஆகவே, இவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் தான் இப்போது இந்த 1000/- ரூபாயிலிருந்து 1,200/- ரூபாயாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, ஏற்கனவே ஓய்வூதியம் வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பங்களை கொடுத்து, காத்திருப்போர் பட்டியலில் தற்போது 74,073 பேர் இருக்கிறார்கள். அவர்களில் தகுதியானவர்களுக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்குவதற்கும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது, என்று அறிவித்தார். முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 6000 கோடி முதலீட்டில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி அளித்து அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. 27,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ரூ.6,000 கோடி மதிப்பிலான புதிய மின்சார வாகனங்கள் (EV) மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) உட்பட பல்வேறு பிரிவுகளில் 10 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Ola, Ather மற்றும் TVS மோட்டார் நிறுவனம் போன்ற பல முக்கிய நிறுவனங்களுடன் மின்சார வாகன உற்பத்தியில் இப்போது டாப்பில் உள்ள ஓசூர்-தர்மபுரி-கிருஷ்ணகிரி (HDK) பகுதியில் EV பிரிவில் ,முக்கியமான முதலீடு வரும் நாட்களில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தமிழகத்தில் பல மாவட்டங்களில் எஸ்டிபிஐ பிரமுகர்கள் வீட்டில் என்ஐஏ அதிரடி சோதனை

Next Post

கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது @ சென்னை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது @ சென்னை

கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது @ சென்னை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In