Chennai oi-Arsath Kan
Published: Saturday, July 8, 2023, 11:50 [IST]
சென்னை: தக்காளி விலை உயர்வு குறித்து சென்னை மேயர் ப்ரியா ராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லைங்க எனக் கூறிவிட்டு நைஸாக நழுவிக்கொண்டார் சென்னை மேயர் ப்ரியா ராஜன். சென்னை மாநகராட்சி பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை இன்று கல்விச் சுற்றுலா அனுப்பி வைத்த மேயர் ப்ரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது மாமன்னன் திரைப்படம் பார்த்துவிட்டீர்களா, படம் எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உற்சாகமாக பதிலளித்த சென்னை மேயர் ப்ரியா ராஜன், மாமன்னன் திரைப்படத்தை தாம் பார்த்துவிட்டதாகவும் படம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் சமூக நீதியை நிலை நாட்டும் ஆட்சியாக திராவிட மாடல் இருக்கிறது என்பதை ”உதய் அண்ணன்” காட்டியிருக்கிறார் எனவும் பேசினார். அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், தக்காளி விலை உயர்ந்துகொண்டே போகிறதே அதை குறைந்த விலையில் கொடுப்பதற்கு மாநகராட்சி சார்பில் ஏதேனும் திட்டம் உள்ளதா என வினவினார். மீண்டும் எகிறிய தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு.. இப்போ என்ன விலை? தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லைங்க என சிரித்துக்கொண்டே பதிலளித்த மேயர் ப்ரியா ராஜன், ஆள விடுங்க எனக் கூறிவிட்டு எஸ்கேப் ஆகப் பார்த்தார். இருங்க இருங்க என மேயரிடம் கூறிய அந்த நிருபர் மாமன்னன் படம் பற்றி மட்டும் பேசுகிறீர்களே எனக் கேட்டதுடன் அந்தப் படம் உங்க டிபார்ட்மெண்டில் வருகிறதா என்பதை கேட்காமல் கேட்டார். இதற்கு என்ன பதிலளிப்பது என்றே தெரியாமல் சிரித்த மேயர் ப்ரியா ராஜன் தனது பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். முன்னதாக மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
When reporters questioned Chennai Mayor Priya Rajan about the increase in the price of tomatoes, Chennai Mayor Priya Rajan said that tomatoes are not in her department.
Story first published: Saturday, July 8, 2023, 11:50 [IST]

