Thursday, September 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உங்க அம்மாவுக்கும் ரூ.1000.. ஸ்டாலின் சொன்னவுடன் சிரித்த மாணவர்கள்! கலைஞர் நூலக திறப்புவிழாவில் கலகல

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
உங்க அம்மாவுக்கும் ரூ.1000.. ஸ்டாலின் சொன்னவுடன் சிரித்த மாணவர்கள்! கலைஞர் நூலக திறப்புவிழாவில் கலகல
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: கருணாநிதி பெயரில் மதுரையில் அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளிடம் உங்கள் அம்மாக்களுக்கு ரூ.1000 கிடைக்கும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

அவர் பேசுகையில், “தி.மு.க.வின் முதல் ஆட்சிக் காலத்திலேயே, தமிழ்நாட்டில் ஏராளமான அரசுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் எவ்வளவு தெரியுமா? 68 தான்! ஆனால், கலைஞர் முதலமைச்சராக இருந்த 1969 முதல் காலக்கட்டத்தில், அதாவது ஏழு ஆண்டுகளில், 97 1975 வரையிலான அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டது!

கோவையில் வேளாண் பல்கலைக் கழகம்! சென்னையில் கால்நடைப் பல்கலைக் கழகம்! டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம்! உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம்! நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்! சேலம் பெரியார் பல்கலைக் கழகம்! ஏராளமான மருத்துவக் கல்லூரிகள்! இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து! இப்படி. கல்வியைக் கொடுத்துவிட்டால், ஒரு மனிதருடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்று அதற்கான மொத்த அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தது கலைஞரோட தி.மு.க. ஆட்சி! இதனுடைய தொடர்ச்சியாகதான் இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம். இல்லம் தேடிக் கல்வி. நான் முதல்வன். ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களின் பசியை போக்க ‘முதலமைச்சரின் அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் “புதுமைப்பெண் திட்டம்”. வருகிற ஆயிரம் செப்டம்பர் மாதம் ரூபாய் வழங்குகின்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” தொடங்கப் போகிறோம். தகுதியுடைய குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது.

உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறுவார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான, மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறோம்.

இந்தியாவில், மற்ற மாநிலங்களும் நம்மை பின்பற்றக்கூடிய அளவிற்கு மகத்தான திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் “திராவிட மாடல்” கோட்பாடு இதுதான். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஆட்சிப் பொறுப்பின் மூலமாக அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

மக்களுக்கு பணி செய்ய, தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பாகதான் ஆட்சிக்கு வந்து இருப்பதையும். முதலமைச்சர் என்கின்ற நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் நான் நினைக்கிறேன். தமிழ்நாடு அனைத்துத் துறையிலும், முன்னேறி இந்தியாவோட தலைசிறந்த மாநிலமாக ஆனது என்று சொல்லவேண்டும். அந்த ஒற்றை இலக்குடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களின் அரசாக, அனைத்து தரப்பு மக்களும் போற்றும் அரசாக நமது தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நூலக திறப்பு விழா: மாணவர்கள் படிக்க கலைஞர் செய்தது என்ன?

சாதனைகளை லிஸ்ட் போட்டு மு.க ஸ்டாலின் பேச்சு மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல. இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

நிறைவாக, தலைவர் கலைஞரின் வரிகளோடு முடிக்கிறேன். “புத்தகத்தில் உலகைப் படிப்போம், உலகத்தை புத்தகமாய்ப் படிப்போம்” என்று தெரிவித்து உள்ளார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்க பொய் வழக்குகள் முக்கியக் காரணம்: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

Next Post

கலைஞர் நூலகத் திறப்பு விழாவுக்கு ஷிவ் நாடார், ரோஷிணியை அழைத்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கலைஞர் நூலகத் திறப்பு விழாவுக்கு ஷிவ் நாடார், ரோஷிணியை அழைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கலைஞர் நூலகத் திறப்பு விழாவுக்கு ஷிவ் நாடார், ரோஷிணியை அழைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In