Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளாவில் இறந்த தம்பதிக்கு திருமண பதிவு! உள்ளூர் நிர்வாகம் செய்த அதிரடி!..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
கேரளாவில் இறந்த தம்பதிக்கு திருமண பதிவு! உள்ளூர் நிர்வாகம் செய்த அதிரடி!..
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்த பிறகு தம்பதிக்கு திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்று அரசு உள்ளூர் நிர்வாகம் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். நாட்டில் வேறு எங்கு இல்லாத நடைமுறை என்றும் சொல்லும் அளவுக்கு கேரளாவில் உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இறந்த பிறகு தம்பதிக்கு திருமண பதிவு செய்து உள்ளூர் சுய அரசு துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விரிவாக இங்கே பார்க்காலாம். கேரள தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள முள்ளூர் பகுதியை சேர்ந்த ஜோல்லி பி தாஸ் என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அங்குள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் நடைபெற்ற இந்த திருமணம் குறித்து உள்ளூர் பஞ்சாயத்தி தகவல் எதுவும் தெரிவிக்கவில்லையாம். அதுபோல திருமணம் பதிவு செய்யப்படவில்லையாம். இதற்கு இடையில், கடந்த 2012 ஆம் ஆண்டு அஜித் குமார் காலமானார். அடுத்த ஆறு ஆண்டுகளில் அவரது மனைவியும் உயிரிழந்தார். தாய் தந்தை இருவருமே உயிரிழந்து விட்ட நிலையில் இவர்களது பிள்ளையை ஜோல்லியின் தந்தை பராமரித்து வந்தார். இந்த நிலையில், தனது பேரனின் படிப்புக்காக பெற்றோரின் திருமண சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இருவருமே இறந்து விட்ட நிலையில், திருமண சான்றிற்காக ஜோல்லியின் தந்தை விண்ணப்பித்த போது, இதுபோன்ற ஒரு சான்றிதழை தங்களால் வழங்க முடியாது என்றும் அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி தேவை எனவும் சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து சிறப்பு அனுமதியின் பேரில் இறந்த பிறகும் இந்த தம்பதிக்கு திருமண பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சொத்து பத்திரப்பதிவு.. வில்லங்க சான்றிதழ் செய்றீங்களா? தமிழக அரசின் அதிரடி.. சபாஷ் இது குறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், ” இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அனுமதியுடன் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார். முன்னதாக கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றது.

அதாவது, திருமணம் நடைபெற்று 53 ஆண்டுகள் கழித்து தம்பதி இறந்த பிறகு பாஸ்கரன் நாயர் – கமலம் தம்பதியினருக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருமண சான்று இல்லாததால் குடும்ப பென்ஷன் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்களது மகன் கோபகுமார் சிறப்பு அனுமதி கோரி இந்த திருமண சான்றிதழை வாங்கியிருந்தார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறையில் புத்துணர்ச்சி: முதல்வர் புகழாரம்

Next Post

கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலக பீரோ, பூட்டுகள் உடைப்பு: போலீஸ் விசாரணை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலக பீரோ, பூட்டுகள் உடைப்பு: போலீஸ் விசாரணை

கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலக பீரோ, பூட்டுகள் உடைப்பு: போலீஸ் விசாரணை

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    கேரளாவில் தான் இறந்து போனவர்களுக்கு திருமண சான்று வழங்க அரசின் சிறப்பு அனுமதி வேண்டும் தமிழ்நாட்டில் சர்ர் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ம் கொடுத்தால் போதும் சாதாரணமாக இறந்து போன இரண்டு பேர்களுக்கு மட்டும் அல்லாது பிறக்கவே இல்லாத நபர்களுக்கும் திருமணச் சான்று வாங்கலாம் தமிழ்நாட்டு சார் பதிவாளர்கள் மிகவும் திறமையானவர்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In