Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை பிய்த்து சாப்பிட்ட இருவர்.. விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 16, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை பிய்த்து சாப்பிட்ட இருவர்.. விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி
64
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புவனேஸ்வரம்: ஒடிஸாவில் எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை இரு நபர்கள் பிய்த்து தின்று கொண்டிருந்த நிலையில் இருவரையும் கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒடிஸா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடா பகுதியைச் சேர்ந்தவர் மதுஸ்மிதா. பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பரிபாடாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அங்கு சில நாட்கள் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த பெண்ணின் உடல் அங்குள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்த உறவினர்கள் கண்ணீர்விட்டபடியே அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு சுந்தர் மோகன் சிங் (55), நரேந்திர சிங் (25) ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரும் திடீரென பாதி எரிந்து கொண்டிருந்த அந்த பெண்ணின் உடலின் அருகே சென்றனர். அந்த உடலின் உடல் பாகத்தை கையால் பிய்த்து எடுத்தனர். அதை 3 பங்குகளாக போட்டனர். அவற்றில் இரு பங்குகளை மீண்டும் தீயிலேயே போட்டுவிட்டனர். மீதமிருந்த ஒரு பங்கை இரண்டாக பிரித்துக் கொண்டனர். இவர்கள் சுடுகாட்டுக்கு வருவதை கிராம மக்களும் பெண்ணின் உறவினர்களும் பார்த்தனர்.

ஆனால் குடிப்பதற்காக வந்துள்ளனர் என நினைத்தனர். ஆனால் இருவரும் பெண்ணின் உடல் பாகங்களை சாப்பிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த இருவரையும் பிடித்து அடித்தனர். பின்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு அவர்களை கம்பத்தில் கட்டி வைத்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தந்துனி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றனர், மேலும் பழங்குடியினரான இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கைது செய்த போதே இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தனர். மேலும் எரிந்த உடலை பிய்த்து தின்றது ஏன் என அவர்களிடம் போலீஸார் கேட்டனர்.

அதற்கு அவர்கள் கூறுகையில் திருமணமாகாத ஒரு பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால் , எங்களுக்கு சக்தி கிடைக்கும் என நம்பினோம். இதை சூனியம் செய்யும் சுந்தர் சிங்தான் எங்களுக்கு கூறினார் என்றனர். இதையடுத்து சுந்தர் சிங்கை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – தரவுகள் அடிப்படையில் பயனாளிகளின் தகுதிகள் நிர்ணயம்

Next Post

தரமான கல்வியில் முதலிடம் பெற உழைக்கிறோம் – மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தரமான கல்வியில் முதலிடம் பெற உழைக்கிறோம் - மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு

தரமான கல்வியில் முதலிடம் பெற உழைக்கிறோம் - மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In