Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போச்சம்பள்ளி அருகே வீட்டில் கணவர் பிரசவம் பார்த்ததால் மனைவி உயிரிழப்பு : சுகாதார துறை, போலீஸார் விசாரணை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
போச்சம்பள்ளி அருகே வீட்டில் கணவர் பிரசவம் பார்த்ததால் மனைவி உயிரிழப்பு : சுகாதார துறை, போலீஸார் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே வீட்டில் கணவர் பிரசவம் பார்த்ததில், பெண் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத் துறையினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேடியப்பன்-தனலட்சுமி தம்பதி. இவர்களது மகள் லோகநாயகி (27). இவருக்கும் தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கர்ப்பமான லோகநாயகியை பிரசவத்துக்கு புளியம்பட்டிக்கு மாதேஷ் அழைத்து வந்துள்ளார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்த மாதேஷ், அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதில் லோகநாயகிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட லோகநாயகியைச் சிகிச்சைக்காக, போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக பர்கூர் வட்டாரம் பெருகோபனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராதிகா, போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், லோகநாயகிக்கு அவரது கணவர் பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் நச்சுக்கொடி உள்வாங்கி, லோகநாயகிக்கு ரத்த போக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, காலை 10.30 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, உயிரிழப்புக்கான காரணம் அறிய பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இயற்கை மீது ஆர்வம் கொண்ட மாதேஷ், மனைவிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என நினைத்து இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

.

Tags: அரகஉயரழபபகணவரசகதரதறபசசமபளளபரசவமபரதததலபலஸரமனவவசரணவடடல
Previous Post

சன் க்ரூப்பா? ஸ்பைஸ்ஜெட்டா? முற்றும் மோதல் எப்போது முடியும்?

Next Post

வருமான வரி அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் – திமுகவினரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வருமான வரி அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் - திமுகவினரின் ஜாமீன் மனு தள்ளுபடி

வருமான வரி அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் - திமுகவினரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In