சென்னை: சென்னை வடபழனியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஏடிஎம் கார்டுகள் மற்றும் பணம் அடங்கிய பர்சை பயணி ஒருவர் தொலைத்துவிட்டு சென்றார்.
அந்த பெண் பயணியை தேடி கண்டுபிடித்து அவரது பொருட்களை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். இந்த நெகிழ வைக்கம் வைக்கும் சம்பவத்தை சென்னை மெட்ரோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்கள் மக்களிடையே தற்போது அதிக வரவேற்பு பெற்று வருகிறது. சென்னையில் தற்போது கோயம்பேடு வடபழனி வழித்தடத்திலும், கோயம்பேடு முதல் சென்டர் வரை உள்ள வழித்தடத்திலும் மக்கள் அதிக அளவு பயணிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை பறக்கு ரயில் பாதை திறக்கப்பட்டால், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மெட்ரோவில் பயணிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதேபோல் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில்கள் முடிந்தால் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை மிக அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதேபோல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை பணிகளும் முடிந்துவிட்டால், அதாவது 2ம் கட்ட மெட்ரோ பணிகள் முடிந்தால் சென்னையில் மக்களின் தேர்வு மெட்ரோ ரயிலாக இருக்கும். பேருந்துகளை பயன்படுத்தும் பல லட்சம் மக்கள் வருங்காலத்தில் மெட்ரோவை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகமும் பயணிகளை ஊக்குவிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. அதிகமாக பயணித்த பயணிகளுக்கு பரிசு வழங்குவது, பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பாஸ் சலுகை கொடுப்பது, மாதந்திர சலுகை கொடுப்பது போன்றவற்றை செய்து ஊக்கப்படுத்தி வருகிறது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பு மற்றும் பார்க்கிங் வசதிகளை அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறத. மினி பேருந்து சேவை, மின் ஆட்டோ சேவை போன்றவற்றை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டி அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நெகிழவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சென்னை மெட்ரோ வெளியிட்ட ட்வீட் பதிவினை பாருங்கள். “நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு (மெட்ரோ ஊழியர்களின்) பற்றிய கதை ! சமீபத்தில் வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.
சென்னை அபார்ட்மெண்ட்களில் மின் கட்டணத்தை குறைக்க இப்படி ட்ரை பண்ணி பாருங்க? நல்ல ஐடியா மெட்ரோவில் பயணித்த பயணி ஒருவர் பிளாட்பாரம் 2ல் தனது பர்சை தவறவிட்டு சென்றார். அதை கண்டுபிடித்து அதில் என்ன இருக்கிறது என்று மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பார்த்த போது, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பல ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.280 ரொக்கம் உள்ளிட்டவை இருந்தன. மாலையில் பர்சை தொலைத்த நிலையில் மறுநாள் காலை வரை பர்சை கேட்டு யாரும் வரவில்லை. A இதையடுத்து சென்னை மெட்ரோ ஊழியர்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு நேரில் சென்று பார்த்தார்கள். வடபழனி மெட்ரோ ரயில் நிலைய மேலாளர் – எஸ்.எஸ்.எம். ராஜேஸ்வரன் மற்றும் ஆபரேட்டர் ஆகாஷ் ஆகியோர் அந்த பொருளை உரிய பயணியிடம் ஒப்படைக்க செய்தனர். இதன்படி சென்னை வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வி.பூஜா என்பவரிடம் பர்சை பத்திரமாக ஒப்படைத்தனர். எந்த அளவிற்கு நேர்மையுடன் கவனத்துடனும் சென்னை மெட்ரோ தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்பணிப்புடன் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது” இவ்வாறு சென்னை மெட்ரோ தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.

