1968-ம் ஆண்டு தமிழகத்தில் அறிஞர் அண்ணா ஆட்சியின் போது இருமொழிக் கொள்கை சட்டமாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மாநில நிர்வாகங்களில் இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மக்களுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடையும் வகையில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதல் கட்டமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தேவைக்கு ஏற்ப மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

