இறந்து பின்பு அவர் உயிருடன் இருப்பது போன்றும் அவரது கையெழுத்தை போலியாக இவர்களே போட்டு என் கணவரை நிறுவனத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இவ்வாறு எனது கணவருக்கு சேரவேண்டிய பங்கை எனக்கும், என் மகளுக்கும் கொடுக்காமல் அபகரித்து மோசடியில் ஈடுபட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது புகாரின் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட இசக்கியம்மாள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இசக்கியம்மாள் புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன் மற்றும் செல்வராஜ், பாலமுருகன், திவாகர் ஆகிய ஐந்து பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தாயாரித்தல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணைமேயர், அமைச்சரின் மருமகன் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

