Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சாலையில் திக்திக் சம்பவம்.. குரோம்பேட்டையில் அப்படியே ஸ்டன் ஆகி நின்ற மக்கள்.. இப்படிலாம் நடக்குமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சாலையில் திக்திக் சம்பவம்.. குரோம்பேட்டையில் அப்படியே ஸ்டன் ஆகி நின்ற மக்கள்.. இப்படிலாம் நடக்குமா?
52
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் நடந்த சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் திடீரென எலக்ட்ரிக் பைக்குகள் வெடிப்பதும், தீ பற்றி எரிவதும் அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இ பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏறபடுத்தியது.

சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் பலியானார்கள். புனே சம்பவம்: இரவில் சார்ஜ் போடும் போது பைக் பேட்டரி வெடித்து புகை ஏற்பட்டுள்ளது. இந்த புகையில் மூச்சு முட்டி இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் கடந்த வாரம் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது.

சாலையில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென தீ பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பைக்கில் அப்போது யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென வெயிலில் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

விளக்கம் அளித்த ஓலா: இதற்கு ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், புனேவில் நடந்த விபத்து குறித்து நாங்கள் அறிந்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம். தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நன்றாக இருக்கிறார்.

பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், இதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள்: மின்சார வாகனங்கள் இப்படி தீ பிடிப்பது பலருக்கும் தெரிந்ததுதான். இ பைக்குகள் வெடிக்க முக்கியமான காரணம் அதன் பேட்டரிதான். போன், லேப்டாப் சில இடங்களில் தீ பிடிக்கும், பவர் பேங்க் வெடிக்கும் அல்லவா? அது போலத்தான் இதுவும். இ பைக்குகள் பொதுவாக லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்தும்.இது தீ பிடிக்கும், வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பிஎம்டபிள்யூ: ஆனால் அதிசயமாக சென்னையில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று தீ பிடித்துள்ளது. டீசல் காரான இது திடீரென தீ பிடித்துள்ளது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில், தாம்பரம் நோக்கி சென்ற BMW கார், தீடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரை ஓட்டிச் சென்ற போதே தீ பிடித்து உள்ளது. இதையடுத்து காரை ஓட்டிச் சென்ற பார்த்தசாரதி, வெளியே குதித்து தப்பித்தார்.

அவர் தப்பிய நிலையில் கார் அப்படியே சாலையில் தீ பிடித்தது. பச்சை கலர் கொழுந்து விட்டு எரிந்ததை பார்க்க அங்கே மக்கள் பலரும் கூடினர். ஸ்டன் ஆகி இந்த சம்பவத்தை மக்கள் கண்கள் விரிய பார்த்துக்கொண்டு இருந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

குட்கா வியாபாரிகள் 69 பேர் சென்னையில் கைது

Next Post

நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தானில் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நிறைவேற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தானில் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நிறைவேற்றம்

நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தானில் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நிறைவேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In