Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

லிஸ்ட்லயே இல்லையே.. டோல்கேட்டே தான்.. திடீரென நிதின் கட்காரியை சந்தித்த.. எம் பி தமிழச்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லிஸ்ட்லயே இல்லையே.. டோல்கேட்டே தான்.. திடீரென நிதின் கட்காரியை சந்தித்த.. எம் பி தமிழச்சி
27
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லி: தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.

டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை வியாழக்கிழமை தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்தார். அப்போது அவர், சுங்கச்சாவடியை அகற்றுவது தொடராக நிதின் கட்கரியிடம் மனு அளித்தார். அவர் தனது மனுவில், தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இந்த தகவலை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “இன்று‌ (27.07.2023), புதுடெல்லியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின்‌ கட்கரியைச் சந்தித்து, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமெனவும் மனு அளித்தேன்.” என்று கூறியுள்ளார். நாவலூர் சுங்கச்சாவடி.. மூச்சுமுட்டும் பழைய மகாபலிபுரம் சாலை.. கோட்டைக்கு பறந்த விஷயம்.. என்னவாம் தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில முக்கிய ஊர்களில் மக்கள் நுழையும் போது அவர்களிடமும் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் எல்லாம் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சொல்வது என்றால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச் சாவடிக்கும், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடிக்குமான இடைவெளி 48 கி.மீ தான் உள்ளது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பில்லூர் அருகே அமைப்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், சென்னையில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களிடம் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் சுங்கச்சாவடி அமைத்திருப்பார்கள். இன்று‌ (27.07.2023), புதுடெல்லியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின்‌ கட்கரியைச் சந்தித்து, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப் பெற…

 2023 அப்படியே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்திவிட்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றால், கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். வெறும் 39 கி.மீ இடைவெளியில் இரண்டு சுங்கச்சாவடி இருக்கும். கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த சுங்கச்சாவடி அங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்தாக அதே சாலையில் வீரசோழபுரம் சுங்கச்சாவடிக்கும், சேலம் மாவட்டம் நத்தக்கரை சுங்கச்சாவடிக்குமான இடைவெளி 42 கி.மீ மட்டுமே இருக்கும். இப்படி தமிழ்நாடு முழுக்க அதிகமான சுங்கச்சாவடிகளை கட்டணம் வசூலிக்கும் நோக்கில் முக்கிய நகரங்களை குறிவைத்து அமைத்துள்ளார்கள். நிதின் கட்காரி கூற்றுப்படி 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்றால் தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு மனது வைக்க வேண்டும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். மத்திய அரசு.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தனித்துவ ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர்: ஓவியர் மாருதிக்கு முதல்வர் புகழஞ்சலி

Next Post

மருத்துவப் படிப்புகள் | 7.5% ஒதுக்கீட்டில் 622 இடங்கள் நிரப்பப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மருத்துவப் படிப்புகள் | 7.5% ஒதுக்கீட்டில் 622 இடங்கள் நிரப்பப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவப் படிப்புகள் | 7.5% ஒதுக்கீட்டில் 622 இடங்கள் நிரப்பப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In