மேட்டூரில் தண்ணீர் திறப்பு..!
மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இன்று தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவி வரவேற்றார். உடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தன..!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றார். மேலும் மாணவிகளுக்கு பாடநூல், சீருடை. காலணி, புத்தகப்பை உள்ளிட்டவைற்றையும் அமைச்சர் வழங்கினார்.

