Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“சுந்தரி” சீரியல் நடிகைக்கு பள்ளியில் நடந்தது என்ன?.. அது என்ன குடத்தில் மஞ்சளா..? மேடையில் செம..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
“சுந்தரி” சீரியல் நடிகைக்கு பள்ளியில் நடந்தது என்ன?.. அது என்ன குடத்தில் மஞ்சளா..? மேடையில் செம..!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவர் தான் படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடியோ ஒன்றை தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் நிஜ சுந்தரிக்கு வாழ்த்துக்களும் குவிகிறது. சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி, நடிகைகள் அழகாக இருக்க வேண்டும் கலராக இருக்க வேண்டும் என்று ஒரு மாயை ரசிகர்களிடமும், நடிகர்களிடமும் தொற்றி இருக்கிறது .ஆனால் அதையெல்லாம் உடைத்து எறிந்தவர்களில் கேப்ரெல்லாவும் ஒருவராக இருந்து வருகிறார்.

தன்னுடைய கலர் என்னுடைய திறமையை எந்த விதத்திலும் குறைவு செய்யாது என்பதை கேப்ரெல்லா பலமுறை நிரூபித்து இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் டிக் டாக் மூலமாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு கவிதை மற்றும் தமிழ் உச்சரிப்பின் மூலமாக இவர் டிக்டாக்கில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். தற்போது சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரெல்லா தனது கணவருடன் கிறிஸ்மஸ் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தையும் வீட்டில் குடில் வைத்திருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

“எழுதியாச்சு படிச்சிடலாமா? என்று இவர் கவிதை எழுதி வெளியிடும் வீடியோக்கள் மிகவும் வைரலானது. பாடகி சுஜாதாவின் பேத்தியை பார்த்தீங்களா..? அம்மா, பாட்டிக்கு போட்டி.. பாடகி சித்ராவுக்கு ஸ்பெஷல் அதுமட்டுமல்லாமல் அப்பா -மகன், அம்மா -மகன், அக்கா -தங்கை, அண்ணன்- தங்கை போன்ற உறவுகளை தனது கவிதை மூலமாக அழகாகவும் தெள்ளத் தெளிவாக தமிழிலும் எடுத்துக் கூறி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனாலேயே இவரை அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர். கேப்ரெல்லாவிற்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர். முதல் முறையாக இவருக்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் கதாநாயகி ஆக நடித்த வாய்ப்பு கிடைத்ததும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுக்க தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் இவர் தான் படித்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எகிறி அடித்த “எதிர்நீச்சல்”.. கலக்கிய விஜய் டிவி “பிரபல” சீரியல் அப்போது அங்கு எடுத்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

பொதுவாக வாழ்க்கையை நாம் ஆரம்பிக்கும் இடம் நம்முடைய பள்ளிக்கூடம் தான். அங்கேயே நாம் ஜெயித்த பிறகு கெத்தாக நிற்பது வேற லெவல் தான் என்று அனைவரும் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் தான் படித்த பள்ளிக்கு கேப்ரெல்லா சிறப்பு விருந்தினராக போகும்போது குழந்தை போல சக குழந்தைகளோடு ஜாலியாக பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு மேடையில் அவர் ஏறும்போது அவருக்கு மஞ்சள் பூசப்பட்ட குடத்தில், மஞ்சள் பூசப்பட்ட தேங்காய் வைத்து ஆரத்தி எடுக்கப்படுகிறது.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் மகள்களை பார்த்திருக்கிறீர்களா…? அதுவும் இந்த “பிரபலங்கள்” தான்..! அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய கேப்ரெல்லா, “எல்லாரும் பார்த்து ஏங்குற பருவம் பள்ளிக்கூட பருவம் மட்டும்தான். எல்லோரும் சொன்னாங்க நீங்க பயங்கரமான பட்டாம்பூச்சிகள் என்று, பியூச்சர்ல நீங்க எல்லாம் கழுகு மாதிரி இருக்கணும். பயங்கரமான உயரத்தில் பறக்கணும்” என்று அங்கிருக்கும் குழந்தைகளுக்கு மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவிற்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

காவிரியில் மூழ்கி 4 மாணவிகள் பலியான வழக்கு – சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Next Post

புதிய மாவட்டங்களின் எம்.பி. தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிப்பதில் சிக்கல் – சத்யபிரத சாஹு தீவிர ஆலோசனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய மாவட்டங்களின் எம்.பி. தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிப்பதில் சிக்கல் - சத்யபிரத சாஹு தீவிர ஆலோசனை

புதிய மாவட்டங்களின் எம்.பி. தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிப்பதில் சிக்கல் - சத்யபிரத சாஹு தீவிர ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In