Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

களைகட்டுது கச்சேரி.. பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
களைகட்டுது கச்சேரி.. பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Bangalore oi-Mathivanan Maran
Published: Tuesday, July 11, 2023, 13:45 [IST]
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க கூடும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது, பொது செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றன. பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த கூட்டம் கர்நாடகாவில் பெங்களூர் நகரில் ஜூலை 17,18-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூறிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒத்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் பெங்களூர் கூட்டத்துக்கு அழைத்துள்ளோம். ஜூலை 17-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும். பின்னர் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து 18-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார். 2 கர்நாடகா பாஜக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கமா? மோடி பிரசார கூட்ட செலவு விவகாரத்தால் சிக்கல்! இதனிடையே பெங்களுர் ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வருகை தரக் கூடும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகுமார் கூறுகையில், ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஜூலை 12-ல் காங்கிரஸ் கட்சி அமைதிப் போராட்டத்தை நடத்த உள்ளது. நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் ஜூலை 17,18-ல் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தியும் பங்கேற்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று, பெங்களூர் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Former Congress President Sonia Gandhi will attend Bengaluru opposition meet on July 17,18.
Story first published: Tuesday, July 11, 2023, 13:45 [IST]

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சென்னை | கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு ரத்து

Next Post

செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In