சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் சதீஷ் என்பவருக்கும் தொழில் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதில் பஞ்சாயத்து செய்ய பாஜக பிரமுகர் சாமுவேல் சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த பாஜக பிரமுகர் சாமுவேல், ரவிக்குமார் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாஜக பிரமுகர் சாமுவேலும் காயமடைந்ததார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

