Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பள்ளி வாகனம் கவிழ்ந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2023 - Updated on July 13, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
பள்ளி வாகனம் கவிழ்ந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை: சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7ஆம் வகுப்பு மாணவன் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய வாகனத்தை பள்ளி நிர்வாகம், அனுமதி பெறவில்லை என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அருகே சருகனேந்தல் பகுதியில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7ஆம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பள்ளி வேன் விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்துக்குள்ளானது பள்ளி வாகனமே இல்லை என்றும் அந்த வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்றும் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். பள்ளியின் சார்பாக பயன்படுத்தப்படும் எந்தவொரு வாகனமும் போக்குவரத்துத் துறையின் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த வேனை அனுமதி பெறாமல், பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்கு பள்ளி நிர்வாகத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 6 பேர் பலி.. எவரெஸ்டை ரசிக்க போய் விபத்தில் சிக்கிய சோகம் மேலும், வழக்கமான ஓட்டுநருக்கு பதிலாக, வேறு ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவன் பலியாக காரணமான விபத்தில் சிக்கிய வாகனத்துக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி பெறாதது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தலைமறைவாக இருந்த அந்த வேன் ஓட்டுநரைச் செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

அனகாபுத்தூர் | பாதாள சாக்கடை திட்ட பணி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்ட திமுக பெண் கவுன்சிலரின் கணவர் கைது

Next Post

தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    முழுக்க முழுக்க குற்றம் பள்ளி நிர்வாகத்தின் மீது உள்ளது நிர்வாகத்தின் கவன குறைவும் அலட்சியமும் இந்த விபத்துக்கு காரணம் இதை காவல்துறையினர் அவ்வளவு பெரியதாக நடவடிக்கை எடுக்காமல் டிரைவர் அலுவலக முடித்துவிடுவார் எனவே பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கொடுங்க அவர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க மாட்டார் எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யுங்கள் செய்யுங்கள் அப்பொழுது தான் நிவாரணம் கிடைக்கும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In