பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான ‛பாஸ்டில் டே’ இன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள நிலையில் இந்தியாவின் முப்படை வீரர்கள் பிரான்ஸ் நாட்டின் படை வீரர்களுடன் இணைந்து அணிவகுப்பு செய்து அசத்த உள்ளனர். இந்த விழாவில் இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவுரவிக்கப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ‛பாஸ்டில் டே’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலக தலைவர்களை அந்நாடு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் தான் இந்த ஆண்டுக்கான தேசிய தினத்துக்கான கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் சென்றார். விமானத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உற்சாகமாக பேசினார். யூபிஐ பணப்பரிவர்த்னை பற்றி பிரதமர் மோடி பெருமையாக கூறினார். மேலும், ‛‛பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். இது இந்தியாவுக்கான பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ் தான். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட நமக்கு பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும்” என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார். செம.. பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கல்.. சிறப்பே இதுதான்.. அசத்தலான பின்னணி அதன்பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார்.
பிரதமர் மோடிக்கு அவர் இரவு விருந்து வழங்கினார். மேலும் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் உயரிய விருதை இமானுவேல் மேக்ரான் வழங்கினார். இந்நிலையில் தான் இன்று பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். விழாவில் இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற உள்ளது. பிரான்ஸ் நாட்டின் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்கள் அணிவகுப்பு நடத்த உள்ளனர். இந்த அணிவகுப்பு மரியாதை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஏற்று கொள்ள உள்ளனர். மேலும் இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான “ஐஎன்எஸ் சென்னை” இந்த விழாவில் பங்கேற்க உள்ளது.
இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த கப்பல் பங்கேற்க உள்ளது. பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இதற்கு முன்பு கடந்த 2009ல் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இந்த பங்கேற்றார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார். இந்த விழாவுக்கு பிறகு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் இமானுவேல் மேக்ரானையும் சந்தித்து தொழில், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு துறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொள்ளும் பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Bastille Day, the national day of France, is going to be celebrated today. While Prime Minister Modi is going to participate as a special guest, the three armed forces of India are marching together with the army of France. Prime Minister Modi and French President Emmanuel Macron will grace the parade.
Story first published: Friday, July 14, 2023, 8:31 [IST]

